Indru nee naalai naan - Tamil thodarkathai

Indru nee naalai naan is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her forty fifth serial story at Chillzee.

  

முன்னுரை

திருமணம் ஆனதும் பெண்கள் தன் குடும்பத்தை விடுத்து கணவன் வீட்டிற்கு மருமகளாக செல்கிறாள் அதுவே ஒரு ஆண் திருமணம் ஆனதும் தன் குடும்பத்தை விடுத்து மனைவியின் வீட்டிற்கு மருமகனாக சென்றால் என்னாகும் என்பதே இக்கதையாகும்.

   

 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 01 - சசிரேகா

  Indru nee naalai naan

  கல்யாணமே வேணாம்னு பிரம்மச்சாரியாதான் வாழ்வேன், என் வாழ்க்கை சாமியார் வாழ்க்கைன்னு பேசிட்டு, இருக்கற சொத்தையெல்லாம் ஊர் மக்களுக்காக செலவு செய்துக்கிட்டு நாய்களை வளர்த்து அதுங்க கூடவே பொழுதை ஓட்டிகிட்டு இருக்கறவனை எப்படி நான் ஏத்துக்குவேன், படுபாவி அவனும் வாழாம உன்னையும் வாழவிடாம செய்றானே, அவனை

  ...
 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 02 - சசிரேகா

  Indru nee naalai naan

  உன் முறைபொண்ணு தெளிவா இருக்கா, அவளுக்கு எந்த அறிவுரையும் சொல்லத் தேவையில்லை ஆனா, நீ ரொம்ப குழம்பிப் போயிருக்க, உனக்குதான் தெளிவு வேணும், உனக்குதான் அறிவுரை சொல்லனும், அப்பதானே அவள்கூட நீ பக்குவமா குடும்பம் நடத்துவ என்றான் கணக்குபிள்ளை கொம்பனிடம்

 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 03 - சசிரேகா

  Indru nee naalai naan

  கண்ணுக்கு முன்னாடி இருக்கற உங்களுக்கு உயிர் தந்த கடவுள்களான உங்க அப்பா அம்மாவ கேளுங்க, உங்களுக்கு நல்லது எது கெட்டது எதுன்னு சொல்வாங்க என்றாள் காவேரி கொம்பனிடம்

 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 04 - சசிரேகா

  Indru nee naalai naan

  கொம்பனா வீட்டை விட்டு ஓடினது, இது தப்பாச்சே, என்னதான் பிரச்சனை வந்தாலும் அதுக்குன்னு இப்படியா, எந்த வீட்லதான் பிரச்சனை இல்லாம இருந்திருக்கு, பிடிக்காத கல்யாணம்னாலும் கொஞ்ச நாள் போனா தன்னால பிடிச்சிப்போயிடும், அதுக்குன்னு இப்படி அவசரப்படலாமா, இதனால யாருக்கு நஷ்டம், இரண்டு வீட்டுக்கும்தானே

  ...
 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 05 - சசிரேகா

  Indru nee naalai naan

  என் பையன் பேரு கொம்பன், ஆயிரம் யானைக்கு சமமான வீரன், இருந்தாலும் மென்மையானவன் வெளி உலகத்தை பெரிசா பார்க்காதவன், யாராவது உதவின்னு வந்து கேட்டா செய்வானே தவிர இதுவரைக்கும் ஈ காக்காக்கூட துரோகம் இழைச்சதில்லை, பொய் சொல்லமாட்டான், தப்பான பழக்கம் ஒண்ணுகூட கிடையாது, ஒத்த புள்ளைங்கறதால பாசம் கொட்டி

  ...
 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 06 - சசிரேகா

  Indru nee naalai naan

  நாலு நல்லது செய்றப்ப நம்ம மேல பழி பாவம் வர்றது சகஜம்தானே, உங்க கொம்பனால என் வாழ்க்கையில நடந்ததை வைச்சி சொல்றேன், அவர் ஊர்காரங்களுக்கு உதவ போனதாலதானே ஊர்காரங்க எனக்கு நடக்க வேண்டிய கல்யாணத்தை நிப்பாட்டினாங்க எனக்கு கெடுதல் செய்தாங்க என்றாள் காவேரி

 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 07 - சசிரேகா

  Indru nee naalai naan

  உனக்காக கொம்பன் எந்தளவுக்கு விட்டுக்கொடுத்து போறான்னு பார்க்கறல்ல, நீயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போனாதான் என்ன குறைஞ்சா போயிடப்போற, எல்லாம் கொம்பன் உன்னை வைச்சி காப்பாத்துவான், அதுக்கு நீ அவனோட விருப்பப்படி வாழு” என ஊர்க்காரர்கள் ஆளாளுக்கு அறிவுரை சொல்லி விட்டுச் செல்ல காவேரியின் கோபம்

  ...
 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 08 - சசிரேகா

  Indru nee naalai naan

  ”நீங்க வேணா கொம்பன் எப்படி போனா எனக்கென்னன்னு இருந்திருக்கலாம் அவர் ஊருக்கு நல்லது செய்றன்னு பிரச்சனையை முடிக்க அடிதடியில இறங்கினாலும் ஏதோ புண்ணியம் வருதுன்னு அமைதியா இருந்திருக்கலாம், அதுக்காக நான் அப்படி இருக்கனும்னு அவசியம் இல்லை, நான் அவர் பொண்டாட்டி அவரோட நல்லது கெட்டதுல என் வாழ்க்கையும்

  ...
 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 09 - சசிரேகா

  Indru nee naalai naan

  அவனது வீடு போல இந்த வீடும் இருக்க வேண்டும் என நினைத்து அதற்கேற்ப மாற்றங்களை புகுத்தினான், அவனது தாய் எப்படி வீட்டை வைத்திருப்பார் என அவனுக்கு நன்கு தெரியும், அதே போல இந்த வீட்டையும் மாற்றிவிட்டால் தனக்கு தனது வீட்டு ஞாபகம் வராமல் இருக்கும் நமது வீடு என்ற எண்ணம் வந்தால் நிம்மதியாக உறங்கலாம் என்ற

  ...
 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 10 - சசிரேகா

  Indru nee naalai naan

  ”இந்த கொம்பனை என்னதான் செய்றதோ செய்றதை செய்துட்டு எப்படி நடந்துக்கறான் பாரு சரியான சேட்டைக்காரன்” என நினைத்து அவன் தந்த முத்தத்தில் கிறங்கிப் போய் வெட்கத்தில் தன்னை மறந்து கொம்பன் மீது காதல் கொண்டாள்.

 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 11 - சசிரேகா

  Indru nee naalai naan

  எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவனை பழிவாங்கியாச்சி, இனி என்ன சொல்லி பழிவாங்கறது, அவனே காதல்ன்னு வரும் போது நாம விலகிப் போனா நல்லாயிருக்காதே இல்லை இல்லை, அவனை இப்படியே விடக்கூடாது அவனுக்கு பொண்டாட்டி வேணாமாம் ஆனா முறைப்பொண்ணு வேணுமாம், இது நல்ல கதையா இருக்கே எனக்கென்னவோ அவன் என்னை முட்டாளாக்கப்

  ...
 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 12 - சசிரேகா

  Indru nee naalai naan

  ”என்னடா ராசா இப்படி சொன்னா எப்படி, நீ என்னவோ சந்நியாசி ஆகப்போறேன்னு சொன்ன அதான் நான் எதுவும் சொல்லிக் கொடுக்கலை, இப்படி ஒரு வாழ்க்கை உனக்கு அமையும்னு முன்னாடியே எனக்குத் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உனக்கு எல்லா வேலைகளையும் கத்துக்கொடுத்திருப்பேன்டா” என்றார் கொம்பனின் தாயார்

 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 13 - சசிரேகா

  Indru nee naalai naan

  ஒரே மகன் என பொறுப்பில்லாமல் வளர்த்து அவன் சந்நியாசி ஆக விரும்பும் வரை அவர்களால் தடுக்க இயலவில்லை, காவேரி அவனை கஷ்டப்படுத்தினாலும் அவனுக்கென்று பொறுப்புணர்ச்சியும் குடும்பத்தின் மீது பற்றும் சந்நியாசி ஆக வேண்டும் என்ற நினைப்பில்லாமல் காவேரியுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பது இப்போது

  ...
 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 14 - சசிரேகா

  Indru nee naalai naan

  ”கொம்பா இதுதான் ஒரே வழி, எந்த ஊர்க்காரங்களால காவேரியோட கல்யாணம் நின்னு அவமானம் நடந்ததோ அதே ஊர்க்காரங்க முன்னாடிதான் அவளை விட்டு போன மானத்தை மீட்க முடியும், இதை விட்டா வேற வழியில்லை கொம்பா நல்லா யோசி, விட்டுக்கொடுத்து போறதால நீ கெட்டுப் போக மாட்ட, இருந்தாலும் உன் மேல தப்பில்லை எதுக்கு

  ...
 • தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 15 - சசிரேகா

  Indru nee naalai naan

  நான்கூட உன்னோட இருந்து இருந்து நொந்துப் போயிட்டேன், இந்த பொண்ணை பார்த்ததும் வாழனும்ங்கற ஆசை வந்துடுச்சி நானும் இவள்கூட புது வாழ்க்கை வாழப்போறேன் அதுவும் எப்படி ஜாலியா” என்றான் கொம்பன் அதைக்கேட்டு காவேரி கோபம் கொண்டாள்

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.