இரவு நேரம் காவேரியின் அறை முதலிரவு அறையாக மாறியிருந்தது. கொம்பனும் காவேரியும் அங்கிருந்த கட்டிலில் ஆளுக்கொரு முனையில் விதியே என அமர்ந்திருந்தார்கள்
காவேரி அழகாக தன்னை அலங்காரம் செய்திருந்தாள், வாசம் மிகுந்த பூச்சரத்தை சூடியிருந்தாள் தலையில் சூடிய பூச்சரத்தை கையால் வருடியபடியே கொம்பனை பார்த்தாள், படுக்கையில் கூட மலர்கள் தூவபட்டிருந்தது. அதில் இருந்த மலர்கள் ஒவ்வொன்றையும் கசக்கி கசக்கி தரையில் எறிந்தபடி இருந்தான் கொம்பன். அவ்விடத்தில் அப்படியொரு அசாத்திய அமைதி, யார் முதலில் பேசுவது என்ற பிடிவாதம் வேறு, இவர்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என இவர்களை பெற்றவர்கள் ஆசையுடனும் கடவுளை வேண்டிக்கொண்டும் இருந்தார்கள், கணக்குபிள்ளை கூட தன் வீட்டிற்கு செல்லாமல் அறைக்கு வெளியே காவல் புரிந்தான், கொம்பனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உதவி புரிய உறங்காமல் காத்துக்கிடந்தான்.
உள்ளே அறையில் காவேரிக்கோ அலுப்பாக இருந்தது, எப்படி எப்படியோவெல்லாம் அவனை பார்த்தும் அவளுக்கு பிடிக்கவில்லை, அதனால் சலிப்பாக உச் கொட்ட அந்த சத்தம் கேட்டு கொம்பன் அவளைப் பார்த்து
”எதுக்கு எப்ப பாரு உச் உச்சுங்கற அவ்ளோ சலிப்பா இருந்தா எதுக்கு இந்த முதலிரவுக்கு ஒத்துக்கனும்”
”இதெல்லாம் சம்பிரதாயம், செய்யனுங்கறது கட்டாயம் அதுக்காக எனக்கு உன் மேல ஆசை வந்துடுச்சின்னு நினைக்காத, உன்னை எந்த கோணத்தில இருந்து பார்த்தாலும் எனக்கு பிடிக்கலை வெறுப்பா வருது, அது ஏன்னு தெரியலை அதை பத்திதான் யோசிக்கிறேன், என்னை தொல்லை பண்ணாத”
”உன்னை பார்த்தாகூடதான் எனக்கு வெறுப்பு வருது, என்ன செய்றது இந்த ஜென்மத்தில நீதான் என் மனைவி இதை மாத்த முடியாது நான் வசமா மாட்டிக்கிட்டேன்”
”இல்லைன்னா என்ன, உன்னை கட்டிக்க நீ நான்னு போட்டி போட்டுக்கிட்டு லைன்ல
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.