This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
டாக்டர் உதட்டை பிதுக்கினார்!
“ஞாபகம் வரலாம், வராமலும் போகலாம். என்னைக் கேட்டா இப்படியே வாழ பழகிக்குறது புத்திசாலித்தனம். உங்க கணவர் உடல் நலம் இப்போ நல்லா இருக்கு! எதையாவது திரும்ப ஞாபகத்துக்கு கொண்டு வரேன்னு அவர் அதிகமா யோசிக்க போய் தேவை இல்லாத ஸ்ட்ரேயினை கொடுக்க வேண்டாம்னு அவர் கிட்ட சொல்லி வைங்க. அப்படி அவர் செய்தா அது எந்த விதமான ரியாக்ஷனை வேணா உருவாக்கலாம். ஒரு நீரோடை போல வாழ்க்கையை அதன் பாட்டில விட்டா, அவருக்கே மறந்து போனது ப்ளாஷ் ஆகலாம்! நீங்களோ, அவரோ எல்லாத்தையும் திரும்ப கொண்டு வரப் போறேன்னு செயற்கையா எதையும் செய்ய வேண்டாம்! தலையில அடிப்பட்டதால யாரு என்னன்னு புரியாம தன் வாழ்க்கையை மொத்தமா மறந்துப் போனவங்க இருக்காங்க, இதே மாதிரி traumaனால எதையுமே நினைவுல வைக்க முடியாம மெமரியே இல்லாம போனவங்களும் இருக்காங்க. சில சமயம் விபத்துக்குள்ளாகாத நாமே பென் எங்கே வச்சேன், சாவி எங்கே, போன் எங்கேன்னு மறந்து போயிடுவோம், அப்புறம் திடீர்னு ஞாபகம் வரும், அது மாதிரி தான் இதுவும்! உங்க கணவருக்கு பொதுவா எல்லாம் ஞாபகம் இருக்கே, ஒரு இருபது முப்பது நாள் என்ன நடந்துச்சுன்னு ஞாபகம் இல்லாமலே போனால் தான் என்ன?”
டாக்டருக்கு எதுவுமில்லை தான்! சுந்தரி அப்படி எப்படி சொல்ல முடியும்?
அவர் சொன்ன அந்த இருபது முப்பது நாட்கள் அவளுடைய வாழ்க்கையையும், இனியவனுடைய வாழ்க்கையையும் மாற்ற கூடியதல்லவா! மூன்று வாரங்களுக்கு முன்பு தானே அவள் நவ்யாவை கல்யாணம் செய்துக்கொள்ளும் அறிவுஜீவி ஐடியாவை இனியவனிடம் சொன்னாள்!
இனியவனுக்கு அதுவும் மறந்துப் போயிருக்குமா???
அப்படி என்றால் அவள் இனியவனை பிரிந்துப் போக வேண்டாமா?
துள்ளிக் குதித்த மனதை அவசர அவசரமாக அடக்கினாள் சுந்தரி. இனியவனுடைய ஆசை நிறைவேற வேண்டும் என்று தானே மனசுக்கு பிடிக்காத ஐடியாவை அவனிடம் சொன்னாள்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.