சண்முகமோ கொம்பனை தன் வீட்டிற்கு வீட்டோடு மாப்பிள்ளையாக அழைத்து வந்ததில் பெரிய மலையை அசைத்துவிட்டது போல கெத்தாக இருந்தார் அதைக்கண்ட கொம்பனோ
”ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க மாமா இது ஒண்ணும் நிரந்தரமில்லை” என சொல்ல அதைக் கேட்டபடி வந்த காவேரியோ
”உன்னை மீறி இவ்ளோ விசயங்கள் நடந்தும் உன்னோட திமிர் இன்னும் அடங்கலையே”
”நடக்கறது அனைத்தும் சிவன் சித்தம், சிவன் என்னை இப்ப சோதிக்கலாம் ஆனா நிச்சயம் கைவிடமாட்டாரு”
”கொஞ்சம் யோசிச்சிப்பாரு உனக்கு நடந்தது இப்ப நடந்துக்கிட்டு இருக்கறது இனிமேல நடக்கப் போறது எல்லாமே சிவனால இல்லை என்னால வரப்போகுது, உன்னை சோதிக்கறது நான், நீ வசமா மாட்டிக்கிட்ட”
”எல்லாம் ஒரு நாள் மாறும் முறைப்பொண்ணே, இன்று நீ நாளை நான், எனக்கான நாள் வரும் போது இந்த கொம்பன் எப்பேர்ப்பட்டவன்னு நீ தெரிஞ்சிக்கத்தான் போற”
”அதையும் பார்க்கலாம் நீ இருக்கறது என் வீட்ல அதை மறந்துடாத”
”அதனால என்ன என் அத்தை வீடுதானே இது”
”ஆனா இங்க என்னோட பேச்சுதான் செல்லுபடியாகும், நான் சொல்றதை எப்படி எங்கப்பா கேட்டு நடக்கறாரோ அதே போல நீயும் கேட்டு நடக்கனும்”
”எது நானா”
”நீதான்”
”உன் பேச்சைக் கேட்டு நான் ஏன் நடக்கனும்”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.