(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”ஏன்னா நீ என் கழுத்தில தாலியை கட்டியிருக்க, என் வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா வந்திருக்க, என்னை அனுசரிச்சி நடந்துக்கிட்டா உன் வாழ்க்கை சிறப்பா இருக்கும், இல்லைன்னா நரகம்தான், சொல்றது சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்” என சொல்லியவள் ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தாள். அவளின் செயலைக் கண்டு விக்கித்துப் போனபடி வந்த கணக்குபிள்ளையோ கொம்பனிடம்

  

”ஏம்பா கொம்பா வழக்கமா கல்யாணம் ஆன பொண்ணுங்ககிட்டதானே அவங்களை கட்டிக்கிட்டவன் இப்படி வசனம் பேசுவான், இங்க என்னப்பா எல்லாமே உல்ட்டாவா இருக்கு, நீ சொல்ல வேண்டியதை அவள் சொல்றா என்னப்பா நடக்குது இங்க”

  

”நடந்தது ஒரு கல்யாணமே இல்லை அது எனக்கு கிடைச்ச ஒரு தண்டனை, இந்த வீடு ஒரு நரகம், அதோ இருக்காளே என் முறைப்பொண்ணு அவள் ஒரு ராட்சஸி”

  

”கொம்பா” என அலற

  

”சரி சரி அழகான ராட்சஸி போதுமா”

  

”போதும் இப்ப நல்லாயிருக்கு அப்புறம் சொல்லு”

  

”சிங்கத்தை எப்படி ரிங்மாஸ்டர் தன் இஷ்டப்படி ஆட்டி வைப்பானோ அது போல என்னை அவள் ஆட்டி வைக்கப் போறா, இது எத்தனை நாளைக்கோ”

  

”உன் குடும்பம் கூட உன்னை கைவிட்டுடுச்சே அதை பத்தி நீ என்ன நினைக்கற“

  

”அவங்களுக்கு ஒரே சந்தோஷம், எப்படியோ நான் சந்நியாசியாகாம சம்சாரியாகிட்டேன்னு நினைக்கறாங்க ஆனா, இங்க நான் குடும்பம் நடத்தவா வந்தேன் இல்லை அவள் என்ன என்கூட சேர்ந்து வாழப்போறாளாமா, எல்லாரோட கணக்கும் தப்பாகப் போகுது கடைசியில ஈசனோட கணக்குபடி எல்லாரும் மாறப்போறோம்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.