(Reading time: 34 - 67 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

அங்கு கல்லாவில் தெரிந்தவர் அமர்ந்திருந்தார்

  

”அட வாப்பா கொம்பா, என்ன இவ்ளோ தூரம், மருந்து வாங்க வந்தியா உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு கேள்விப்பட்டேன் ஏன்பா பத்திரிகை கொடுத்திருந்தா அவசியம் நான் வந்திருப்பேனே, எனக்கு பிரச்சனை வந்த சமயம் அந்த பிரச்சனையை தீர்த்து வைச்சி எனக்கு புதுவாழ்க்கையை கொடுத்தவனாச்சே நீ, உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்திருப்பேனே” என பக்கம் பக்கமாக பேசி வைக்க கணக்குபிள்ளையோ

  

”அதெல்லாம் இருக்கட்டும் எங்களுக்கு இல்லை இல்லை இதோ இருக்கானே நம்ம கொம்பனோட பொண்டாட்டிக்கு ஒரு பொருள் வாங்க வந்தோம், அது இங்கதான் விக்குமாம் துணிக்கடை முதலாளி சொன்னாரு அதான் வந்தோம்“

  

”ஓ அப்படியா சொல்லுப்பா என்ன வேணும்”

  

”இதுதான் வேணும்” என சொல்லி லிஸ்ட்டை நீட்ட அதைவாங்கிப் பார்த்து மென்மையாக சிரித்தவர்

  

”அட இதுல என்னப்பா கூச்சம் வேண்டிக்கிடக்கு, இப்பல்லாம் இது சாதாரணமாயிடுச்சி, வீட்ல பொம்பளை புள்ளைங்க இருந்தாலே இதெல்லாம் சகஜம்தானே, முன்ன காலத்திலதான் இதை அருவெறுப்பா நினைச்சாங்க, இப்பலாம் அப்படி கிடையாது, அப்பாவாகட்டும் அண்ணன் தம்பின்னு யார் வேணும்னாலும் வந்து வாங்கறாங்கப்பா இதுக்குப் போய் தயங்கலாமா“ என சொல்லவும் கொம்பனுக்கு நிம்மதியாகிப் போனது

  

”நல்லவேளை நம்ம மானம் காத்துல போகலை” என மனதுள் நினைத்தவன் சிரித்தபடியே

  

”அப்படின்னா அதை கொடுங்களேன் நேரமாச்சி வீட்டுக்கு போகனும் பொழுது போயிட்டா என் முறைப்பொண்ணு கோச்சிக்குவா”

  

”முறைப்பொண்ணா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.