”கொம்பா பொங்காத, உன் முறைப்பொண்ணு உனக்கு நரகத்தை காட்டறேன்னு டிசைன் டிசைன்னா ப்ளான் பண்றா, இதெல்லாம் எப்படி யோசிச்சிருப்பா ஒருவேளை நாம தூங்கின சமயம் திட்டம் தீட்டியிருப்பாளோ”
”இப்ப இதுவா முக்கியம் இதுக்கு என்ன செய்றது அதை சொல்லு” என லிஸ்ட்டை நீட்டி கேட்க அவனோ
”வேற வழியில்லை கொம்பா வாங்கிட்டு போகலைன்னா தெருவிலதான் தூங்கனும், அது இன்னும் மானக்கேடு அதுக்குப் பதிலா இதையே வாங்கிட்டுப் போகலாம் நண்பா”
”இதை எப்படிடா நான் வாங்கறது”
”கொஞ்சம் கஷ்டம்தான் ஆனாலும் செய்துதானே ஆகனும்பா”
”எப்படிடா”
”வா பார்க்கலாம் வாப்பா வா” என விடாப்பிடியாக அழைத்துக் கொண்டு துணிக்கடைக்குச் சென்றான்.
அங்கோ பெண்கள் செக்ஷனில் பெண்களே இருக்க இவ்விருவருக்கும் ஒரு மாதிரியாகிப் போனது ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழிக்க இவர்கள் வந்ததைக்கண்ட கடை முதலாளியே பவ்யமாக வந்து நின்று பேசினார்
”அடடே வாப்பா கொம்பா நீ என் கடைக்கு வந்தது நான் செஞ்ச பாக்கியம் உன் புண்ணியத்தில இப்ப இந்த கடை ஓஹோன்னு ஓடுதுப்பா”
”ஓ அப்படியா சந்தோஷம் சந்தோஷம்” என சொல்லிய கொம்பன் சட்டென கடையை விட்டு கிளம்பி வெளியே செல்ல முயல தடுத்தான் முதலாளி