பார்த்துக்கலாம்” என சொல்ல கொம்பனும் ஐம்பதாயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினான்.
இருவரும் பைக்கில் அமர்ந்ததும் கொம்பனோ
”சரி முதல்ல எங்க போறது”
”மளிகைகடைக்கு போலாம் கொம்பா”
”சரி” என சொல்லி நேராக மளிகை கடைக்குச் சென்றான் அங்கிருந்த கடைக்காரரிடம் கொண்டு வந்த லிஸ்டை தந்து
”இதுல இருக்கற பொருளை எடுத்துக் கொடுங்க” என சொல்ல கடைக்காரரும் அந்த லிஸ்ட்டை பார்த்துவிட்டு கொம்பனைப் பார்த்து கலகலவென சிரித்துவிட்டார்
”எதுக்குண்ணா சிரிக்கறீங்க”
”என்னப்பா கொம்பா வரவர உன்னோட விளையாட்டுத்தனத்துக்கு அளவேயில்லைப்பா”
”ஏன்”
”இதை யார் உனக்கு தந்தது“
”என் முறைப்பொண்ணு”
”முறைப்பொண்ணா”
“அதான் நான் தாலிகட்டி வைச்சிருக்கேனே அவளை சொன்னேன்”
”ஓஹோ உன் பொண்டாட்டியா நினைச்சேன் இதப்பாரு கொம்பா இந்த லிஸ்ட்ல இருக்கற பொருள் எல்லாம் இங்க கிடைக்காதுப்பா நீ வேற கடைக்குப் போய் வா” என சொல்ல