செய்து வைச்சி அவனோட வாழ்க்கையை நாங்க நாசமாக்கிட்டோம், நாங்க செஞ்ச தப்புக்கு பிராயசித்தம் தேடிக்கிட்டு இருக்கோம், வேங்கையனை பார்க்கறப்பலாம் நாங்க மன்னிப்பு கேட்டுக்கிட்டுதான் இருக்கோம்”
”ஒரு விசயம் சொல்லுங்க ஆன்ட்டி, உங்களுக்கு வேங்கையனை பிடிக்குமா இல்லை மூர்த்தியை பிடிக்குமா”
“ரெண்டு பேரையும் பிடிக்கும்தான் ஆனாலும் வேங்கையன் எங்களுக்கு மருமகனா வரனும்னு நாங்க ரொம்ப ஆசைப்பட்டோம்“
”ஆனா ஜானகி அப்படி ஆசைப்படலையே, பேசாம அவள் ஆசைப்பட்டபடியே மூர்த்தியோட கல்யாணம் செய்து வைச்சிருக்கலாமே”
”என்ன பேசற நீ, ஏற்கனவே வாக்கு கொடுத்தாச்சி கொடுத்த வாக்கை மீறமுடியுமா”
”ஆனா இப்ப 3 பேர் வாழ்க்கை கேள்வி குறியால இருக்கு, யாருமே சந்தோஷமா இல்லங்கறப்ப எப்பவோ கொடுத்த வாக்கு பெரிசா போச்சா உங்களுக்கு” என கோபத்தில் வெடித்தாள் மஹதி அதைக்கேட்டு மென்மையாக சிரித்த வேணியோ
”நீ உன் தோழி பக்கம் இருந்து பேசற, அதான் கோபப்படற மத்தவங்க பக்கம் இருந்து பாரு உண்மை தெரியும்”
”உண்மை எதுவாயிருந்தாலும் விருப்பம்தான் முக்கியம், நீங்க செய்தது தப்புதான் ஆன்ட்டி, ஜானுவை மூர்த்தியோடதான் சேர்த்து வைச்சிருக்கனும்” என சொல்ல வேணியோ இளப்பமாக சிரித்துவிட்டு
”என் பொண்ணுக்கு மூர்த்தி ஏத்தவன் இல்லை” என மெதுவாக சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்தாள்
”இதுக்கு என்ன அர்த்தம்”