(Reading time: 20 - 40 minutes)
Chinna marumagal
Chinna marumagal

வேங்கையனை இழந்துட்டோமேன்னு அவள் வருந்தனும், முதல்ல அவளுக்கு மூர்த்தி எப்படிப்பட்டவன் வேங்கையன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சிக்கனும், தெரிய வைக்கிறேன் ஐ அம் சாரி ஜானகி. உனக்கு உதவ வந்தேன் ஆனா, என் வாழ்க்கைக்காக இப்ப உன் வாழ்க்கையை நான் பறிக்கப் போறேன், என்னை மன்னிச்சிடு, நீ ஆசைப்பட்டபடியே மூர்த்தியோட வாழு நான் வேங்கையனோட வாழ்ந்துக்கிறேன்

  

வேங்கையா என்னோட காதலனே என் மனம் கவர்ந்த கள்வனே, உனக்காக உன்னை தேடி நான் வரேன், உன்மேல எனக்கு எழுந்த காதலால நீ மனசு மாறி என்னை ஏத்துக்கனும், ஒருத்தனுக்கு ஒருத்திங்கறது மரபுதான் பண்பாடுதான் ஆனா, அது யார்ங்கறதுதான் முக்கியமே, உனக்கு நான்தான், எனக்கு நீதான், நமக்கு நடுவில யாரும் வரமாட்டாங்க, வரவும் விடமாட்டேன், சுயநலமா நான் யோசிச்சாலும், உன்னைப் போல பொக்கிஷத்தை இழக்க என்னால முடியாது

  

உன் மேல எனக்கு எழுந்த காதலை மத்தவங்க தப்பா நினைச்சாலும் எனக்கு கவலையில்லை, ஒருமுறை நீ என் காதலை ஏத்துக்கிட்டா போதும், இந்த உலகமே என் காதலை கொச்சையா நினைக்காம நல்லபடியா நினைக்கும்

  

வேங்கையா ஐ லவ் யூ, ஐ லவ் யூ ஸோ ஸோ மச்” என அவளுக்கு அவளே குதூகலமாக சொல்லிவிட்டு மறுநாள் வேங்கையன் வீட்டிற்கு செல்வதை நினைத்து மகிழ்ந்து அந்த சந்தோஷத்தில் நிம்மதியாக உறங்கிப்போனாள்.

  

மறுபக்கம் வேணி உறங்குவதற்காக அறைக்கு வர அங்கு குபேரன் இன்னும் உறங்காமல் இருப்பதைக் கண்டு வியந்து

  

”என்னங்க தூங்கலையா” என கேட்க அவரோ மலர்ச்சியான முகத்துடன்

  

”பல நாள் கவலை இன்னிக்கு மஹதி மூலமா தீரப்போகுதுன்னு நினைக்கறப்ப சந்தோஷத்தில தூக்கம் கூட வரலை வேணி”

  

”மஹதியை முழுசா நம்பலாமா கடைசியில நட்பு அது இதுன்னு ஜானகி பேச்சைக் கேட்டு மாறிடமாட்டாள்ல“

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.