(Reading time: 20 - 40 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”மஹதியும் ஜானகியும் ஒண்ணா என்ன, ரெண்டு பேரோட குணங்களே வேற, ஜானகி போல மஹதி யோசிக்கறதில்லை, அவள் சரியான முடிவுகளை எடுத்திருக்கா அவளை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, அவளை நல்லபடியா வளர்த்திருக்காங்க என்னிக்காவது மஹதியோட அப்பா அம்மாவை சந்திக்கற வாய்ப்பு கிடைச்சா பொண்ணை நல்லபடியா வளர்த்திருக்கீங்கன்னு சொல்லி அவங்களை பாராட்டனும் வேணி”

  

”அப்படி என்னதான் நடந்ததுங்க, அவளை கூட்டிக்கிட்டு எங்கதான் போனீங்க”

  

”மூர்த்தியை பத்தியும் வேங்கையனை பத்தியும் அவள் தெரிஞ்சிக்கனும்னு நினைச்சேன், அதனால அவளை கூட்டிட்டு போய் மூர்த்தியையும் வேங்கையனையும் காட்டிட்டு வந்தேன், அவங்களை பார்த்தபின்னாடி மஹதியோட மனசே மாறிடுச்சி, ஜானகி மேலதான் தப்புன்னு அவள் சொன்னா, ஜானகியோட மனசை மாத்தி வேங்கையனோட சேர்த்து வைக்கப்போறேன்னு சொன்னா”

  

”மஹதியோட மனசு மாறிச்சா அப்படி என்ன நடந்தது”

  

”முதல்ல மஹதியை கூட்டிக்கிட்டு நான் போன இடம் மூர்த்திகிட்டதான், அவன் பேங்க்ல இருந்தான், மஹதியை அவன்முன்னாடி நிக்க வைக்க எனக்கு சங்கடமா இருந்தது காரணம் நம்ம பொண்ணாலதானே மஹதிக்கு கிடைச்ச மூர்த்தி வரன் தட்டிப்போச்சி கண்டிப்பா மஹதியை பத்தி அவனுக்கு தெரிஞ்சிருக்கும், அதனால அவளை ஒரு பக்கம் நிக்க வைச்சிட்டு மூர்த்திகிட்ட பேச போனேன் நாங்க பேசறதை அவள் கேட்டுக்கிட்டு இருந்தா”

  

”அப்படி என்ன பேசினீங்க”

  

”வழக்கம் போலதான் என் பொண்ணு செஞ்சது தப்பு, அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்னு மெதுவா பேச்சுக் கொடுத்தேன் ஆனா, அந்த மூர்த்தி பழைய மூர்த்தியில்லை வேணி, முழுசா மாறிட்டான், அவனுக்கு தான் பேங்க் ஆபிசர்ங்கற திமிரு, என்னையே அவன் மதிக்கலை, வேண்டாதவனை போல என்கிட்ட நடந்துக்கிட்டான்”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.