”அப்படியாங்க நம்ம மூர்த்தியா அப்படி நடந்துக்கிட்டான்”
”ஆமாம் வேணி, முன்ன இருந்த மூர்த்தி எப்படியிருப்பான் என்முன்னாடி பவ்யமா நின்னு பேசுவான், நான் எதைச் சொன்னாலும் தட்டாம செய்வான் ஆனா, இப்ப என் முன்னாடி தில்லா நிக்கறான், ஜானகின்னு சொன்னதும் அவன் முகமே வெறுப்புல மாறிடுச்சி, நான் பேசினா அவனுக்கு பிடிக்கலை, இதை சொல்லவா வந்தீங்க மாமா, எனக்கு நிறைய வேலையிருக்கு, கிளம்புங்கன்னு பட்டுன்னு சொல்லி விரட்டறான்”
”அய்யோ”
”ஜானகி உன்னையே நினைச்சிக்கிட்டு இருக்கா, கண்டிப்பா 6 மாசம் கழிச்சி டைவர்ஸ் ஆனதும் அவள் உன்கிட்டதான் வந்து நிப்பா, அப்ப நீ அவளை ஏத்துக்கனும்னு சொன்னா அவன் முகமே மாறிடுச்சி, கோபமா பார்த்தான் நான் என்ன முன்ன இருந்த மூர்த்தியா, இப்ப என்னோட ரேஞ்சே வேற, இந்த பேங்க்ல நான் ஒரு ஆபிசர் எனக்கு இங்க எவ்ளோ மதிப்பு மரியாதை இருக்கு தெரியுமா, நான் எப்படி ஜானகியை ஏத்துக்கறது, அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி வேங்கையனை அவளுக்கு பிடிக்கலைன்னா அதுக்கு நான்தான் இளிச்சவாயனா, என்னால அவளை ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டான்”
”அடப்பாவி அப்படியா சொன்னான்”
”ஆமாம்”
”ஆனா அவனுக்கு ஜானகியை பிடிக்கும்தானே”
”பிடிக்கும்தான் ஆனா, இப்ப பிடிக்கலைங்கறான், நான் சொன்னேன், ஏன்பா மூர்த்தி அவள் கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் உன்னையே சுத்தி சுத்தி வந்தாளே அப்ப அவளோட அன்பு உனக்கு தெரியலையா, நீயும்தானே அவள்கிட்ட அன்பா நடந்துக்கிட்ட அதெல்லாம் மறந்துட்டியா மூர்த்தின்னு கேட்டா, அதுக்கு அவன் சொல்றான் ஏதோ மாமா பொண்ணு சுத்தி வருதேன்னு பழகினேன், மத்தப்படி வேற ஒண்ணும் இல்லை அவளை வைச்சி நேரம் ஓட்டினேன்னு சொன்னான், நான் அப்படியே ஆடிப்போயிட்டேன் வேணி“