”என்னங்க இப்படியெல்லாம் பேசறான், அவளுக்காக அது இதுன்னு என்னென்னமோ வாங்கி வந்து வைச்சானே அது எல்லாம் என்ன“
”கேட்டேனே அதுக்கு அவன் சொல்றான், நானா வாங்கி வரலை எனக்கு வாங்கித்தரனும்னு எண்ணம் இல்லை, வேங்கையன்தான் எப்ப பாரு ஜானகிகிட்ட இதை கொடு அதை கொடுன்னு எதையாவது பொருள் வாங்கி தருவாப்ல, அதை கொண்டு போய் நான் ஜானகிகிட்ட தருவேன், அவ்ளோதான் என்கிட்ட ஏது பணம், ஏகப்பட்ட சொத்து இருந்தும் எங்கப்பன் எனக்கு ஒத்த பைசா தரலை, என் படிப்புக்கான செலவே வேங்கையன் செஞ்சது, அவனாலதான் நான் இந்தளவுக்கு ஒரு ஆபிசரா வந்திருக்கேன், அந்த நன்றிகடனுக்காகத்தான் அப்ப அப்ப அவன் சொன்ன வேலையை செய்தேனே தவிர நானா ஜானகிக்கு இம்மியளவு கூட செலவு செஞ்சதில்லைன்னு சொன்னான், ஜானகி எனக்குன்னு கொடுத்த பரிசு பொருள் எல்லாம் வீட்ல பத்திரமா இருக்கு அதை வேணா திருப்பிக் கொடுத்துடறேன், அதுக்காக நான் அவளை ஏத்துக்க முடியாதுன்னு தீர்த்து சொல்லிட்டான்”
”நான் அப்பவே சொன்னேன் மூர்த்தி மோசமானவன்னு அதை நம்ம பொண்ணு கேட்டாளா, கண்மூடித்தனமால அவனை நம்பினா இப்படி மூர்த்தி பேசினது மட்டும் அவளுக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவா தெரியுமாங்க”
“அவள் வருந்தறது அப்புறம் முதல்ல அவள் நம்புவாளா அதைச் சொல்லு, அவனை பத்தி நாம எவ்ளோ சொல்லியும் பெத்தவங்க பேச்சை நம்பாம அவன்தான் வேணும்னு அடம்பிடிச்சாளே”
”பாவம்ங்க நம்ம பொண்ணு, அவள் வாழ்க்கையே இப்ப கேள்விக்குறியாயிடுச்சிங்க”
”என் பொண்ணு பாவம், வேங்கையனை விட்டு வந்தா நீதான் ஏத்துக்கனும் வேற யாரும் ஏத்துக்க மாட்டாங்க, நீ கேட்கற அளவுக்கு சொத்து எழுதி தரேன், ஏன் முழு சொத்தும் உனக்கே தரேன்னு சொல்லி கைகூப்பி கெஞ்சறேன், பதிலுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா, இதே பேச்சை நீங்க அவளோட கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லியிருந்தா கூட சொத்துக்காக அவளை ஏத்துக்கிட்டிருந்திருப்பேன் ஆனா, இப்ப என்னால முடியாதுன்னுட்டான், சரிப்பா இப்பதான் நான் சொத்து தரேன்ங்கறேனே, அப்புறம் என்னன்னு கேட்டா சொத்தை விட