எனக்கு இப்ப இருக்கற பதவியும் அதுல வர்ற புகழும்தான் முக்கியம், சொத்துள்ள பொண்ணுங்க நம்ம ஊர்லயே எக்கச்சக்கமா இருக்காங்க, அதுல யாரையாவது நான் பார்த்துக்கிறேன், இப்ப போய் நான் ஜானகியை ஏத்துக்கிட்டா ஊரே என்னை பழிக்கும், அவமானப்பட என்னால முடியாது, அந்தளவுக்கு ஜானகி ஒர்த் இல்லைன்னு முகத்துக்கு நேரா சொல்லிட்டான் வேணி” என சொல்லி குபேரன் கண்கள் கலங்கி அழவே தொடங்க வேணிக்கு கஷ்டமாகிப் போனது
”ஏங்க அழாதீங்க”
”என்ன பேச்செல்லாம் பேசிட்டான் தெரியுமா, நம்ம மூர்த்தியா இதுன்னு நானே ஆச்சர்யப்பட்டேன், அதை விட அவன் மேல மலையளவு நம்பிக்கை வைச்சிருக்காளே நம்ம பொண்ணு, அவளை பத்திதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு வேணி”
”சரி சரி அழாதீங்க கடவுள் இருக்காரு கண்டிப்பா அவர் நம்ம பொண்ணை கைவிடமாட்டாருங்க நம்புங்க” என சொல்ல குபேரனும் தனது துக்கத்தை சற்று ஆற்றிக் கொண்டு
”அதுக்கு மேல அவன்கிட்ட பேச எனக்கு எதுவும் தோணலை, சரிப்பா நான் கிளம்பறேன்னு சொன்னா உடனே அவன் சொல்றான் இதுபோல அடிக்கடி வந்து தொல்லை செய்யாதீங்க, எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, அதை நீங்களும் உங்க பொண்ணும் சேர்த்து கெடுத்துடாதீங்க, ஏற்கனவே நான் ஜானகிகிட்ட சொல்லிட்டேன், உன்னை ஏத்துக்க முடியாதுன்னு, அதையும் மீறி அவள் முட்டாள் மாதிரி செய்ற தப்புக்கு நான் துணைபோக மாட்டேன், அவள்கிட்ட சொல்லி புரிய வைங்க, என்னோட வாழ்க்கை முறை மாறிடுச்சி, மறுபடியும் பழைய மூர்த்தின்னு நினைச்சிக்கிட்டு என்கிட்ட வரவேண்டாம்னு சொல்லுங்க, அப்படியே அவளுக்கு டைவர்ஸ் ஆனாலும் அதுக்கு நான் பொறுப்பில்லை, அவள் வந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன்னு தீர்த்து சொல்லிடுங்க, நான் வர போற வழியெல்லாம் சும்மா சும்மா என் முன்னாடி வந்து மாமா மாமான்னு உருகி பேசின காலம்லாம் மாறிடுச்சி, இப்பலாம் அவள் வந்து பேசினா காதுல ஆசிட் ஊத்தற மாதிரியிருக்கு, நான் அவளை எப்படியெல்லாம் விரட்டப்பார்த்தாலும் கேட்க மாட்டேங்கறா, மறுபடியும் அவள் என்கிட்ட வராத மாதிரி பார்த்துக்குங்க, அதுதான் உங்களுக்கு நல்லது இல்லைன்னா அவளால நீங்க ரொம்ப அசிங்கப்பட்டு போயிடுவீங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கான் வேணி, அவன்