”அவளுக்கு நான் செய்யப்போறதை சொல்லப்போறதில்லை, வேங்கையனுக்கு புரியவைச்சி அவரே உன்னை விட்டுவிலகற மாதிரி செய்யப்போறேன்னு சொல்லப்போறேன், அதை அவள் நம்பி என்னை அந்த வீட்ல தங்கி இருக்க ஒத்துக்குவா”
”எல்லாம் சரி இந்த விசயம் வேங்கையனுக்கு தெரியுமா“
”எல்லாம் அங்கிள் அவர்கிட்ட பேசிட்டாரு”
”என்னன்னு”
”நான் நடத்தற நாடகத்தை பத்தி விளக்கமா சொல்லிட்டாரு, முதல்ல அவரு நம்பலை, ஒத்துக்கலை, அப்புறம் அங்கிள் பேசியே அவரை சம்மதிக்க வைச்சிட்டாரு”
”நீ வேங்கையன் வாழ்க்கையில நுழைஞ்சா அது ஜானகிக்குதானே கொண்டாட்டம் நிம்மதின்னு அவள் வேங்கையனை விட்டுடுவா”
”அப்படி நான் விடமாட்டேன் ஆன்ட்டிஈ வேங்கையன் பெஸ்ட்ன்னு அவளுக்கு புரிய வைக்கனும், அவள் முன்னாடியே நான் நாடகமாடி மெதுமெதுவா அவள் மனசுல வேங்கையனை கொண்டு வரவைக்கறேன்”
”நீ வேங்கையன் கிட்ட பேசினியா”
”இல்லை நான் பேசலாம்னு இருந்தேன் ஆனா அங்கிள் விடலை அவரே பேசிட்டாரு”
”எப்படி உன் மனசு மாறிடுச்சி, மூர்த்தியை நீ பார்க்கலையா”
“பார்த்தேன் மூர்த்தி தன் வாழ்க்கையை வேறமாதிரி வாழறாரு, அது ஜானகிக்கு செட்டாகாது, முன்ன இருந்த மூர்த்தி வேற இப்ப இருக்கற மூர்த்தி வேற, இந்த வித்தியாசத்தை ஜானகிக்கு புரியவைச்சிட்டாலே போதும், தன்னால அவள் வேங்கையன்கிட்ட போயிடுவா”