”வேங்கையனுக்கு உன்னோட திட்டம் பிடிச்சதா, அவன் நல்லவனாச்சே இதுக்கு ஒத்துக்க மாட்டானே”
”ஆரம்பத்தில ஒத்துக்கலை அங்கிள் பேசி பேசி அவர் மனசை கரைச்சாரு, ஜானகிக்காக அவரும் சரின்னு ஒத்துக்கிட்டாரு, ஜானகி மனசு மாறனும் அதுக்காக நான் சொல்றதை கேட்டு அப்படியே நடந்துக்கறதா சொன்னாராம், அதுவே போதும் எனக்கு, அவரை விரும்பற பொண்ணா நான் அந்த வீட்டுக்குள்ள நுழையப் போறேன், எனக்கு துணையா அவர் இருப்பாரு, இதுல ஜானகிக்கு விருப்பம் இருக்காது ஆனாலும் வேங்கையன் தன்னை விட்டு போனா போதும்னுதான் அவள் யோசிப்பா, அதுதான் எனக்கும் தேவை ஆன்ட்டி, அப்படி அவள் யோசிக்கனும், அப்பதான் என்னால என் திட்டத்தை சரியா நடத்தமுடியும், நான் போட்ட திட்டப்படி எல்லாம் சரியா நடந்தா எல்லார் வாழ்க்கையும் மாறி சந்தோஷமாயிடும்”
”என்னவோ உன்னால நல்லது நடந்தா அதுவே போதும்”
”கண்டிப்பா நடக்கும் ஆனா அதுக்கு நிறைய நாள் ஆகும் ஆன்ட்டி”
”ஆகட்டுமே பரவாயில்லை”
”இன்னும் 6 மாசம் இருக்கு, அதுக்குள்ள அவள் மனசை மாத்தப்பார்க்கிறேன், அப்படியும் அவள் மாறாம வீம்பா இருந்தா அவள் தலையெழுத்தை யாராலயும் மாத்த முடியாது ஆன்ட்டி, வேங்கையனை பத்தி உயர்வா சொன்னா அவள் ஏத்துக்கமாட்டா, அவளே கண்கூட பார்த்து தெரிஞ்சிக்கட்டும், அப்பதான் மனசு மாறுவா பெரிசா நம்பிக்கையெல்லாம் வைச்சிக்காதீங்க ஆன்ட்டி, எனக்கே 5 சதவீதம்தான் நம்பிக்கைஇருக்கு அந்த 5 சதவீதத்தை 100 சதவீதமா மாத்த நான் நிறைய கஷ்டப்படனும், போராடனும், எனக்கு ஏகத்துக்கு வேலைகள் இருக்கு ஆன்ட்டி”
”சரி விடு விதிப்படி நடக்கட்டும் எனக்கு உன் மேல நம்பிக்கையிருக்கு, நீ வா சாப்பிட்டு தூங்குவ, நாளைக்கு நீ வேங்கையன் வீட்டுக்கு போகனும்ல”
”சரிங்க ஆன்ட்டி” என சொல்லியவள் சாப்பிடச் சென்றாள்.