(Reading time: 20 - 40 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”பொறுமை ஆன்ட்டி, அவளோட நல்லதுக்காக அவள் மனசை மாத்தபோறேன், அவளுக்கு யார் சரின்னு காட்டப்போறேன் அவளே மனம் மாறுவா அதுக்கு நான் பொறுப்பு”

  

”எப்படியோ அவள் வேங்கையனோட வாழ்ந்தா அதுவே போதும் எனக்கு“

  

”யார் வாழ்க்கை யார்கூடன்னு யாருக்கு தெரியும், அதுக்குள்ள அவசரப்பட்டு சந்தோஷப்படாதீங்க என்னால முடிஞ்சதை நான் செய்றேன், அதுக்கு அப்புறம் கூட ஜானு வீம்பா இருந்தா யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது ஆன்ட்டி”

  

”எனக்கு உன் மேல நம்பிக்கையிருக்கு, உன்னால முடியும் ஆமா ஜானகி மனசை மாத்த நீ என்ன செய்யப் போற”

  

”முதல் வேலையா நான் நாளைக்கே வேங்கையன் வீட்ல போய் இறங்கப் போறேன்”

  

”இறங்கி”

  

”அவரை கல்யாணம் செய்துக்கப் போறதா சொல்லப்போறேன்”

  

”என்ன இப்படி சொல்ற” என வேணி அதிர குபேரனோ

  

”ப்ச் அதிர்ச்சி ஆகாத இது வெறும் நாடகம்தான்”

  

”நாடகமா”

  

”ஆமாம் ஆன்ட்டி, ஜானகியை பொருத்தவரைக்கும் வேங்கையன் முட்டாள், முரடன், காட்டான் அது பொய் அவன் நல்லவன் மென்மையானவன்னு நிரூபிக்கனும், அதுக்கு நான் அந்த வீட்ல இருக்கனும்”

  

”இதுக்கு ஜானகி எப்படி ஒத்துக்குவா“

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.