(Reading time: 20 - 40 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”போக போக உனக்கேப் புரியும், எனக்கு வேலையிருக்கு நீ போய் ஓய்வெடு” என சொல்லிவிட அதற்கு மேல் அவளுக்கு என்ன பேசுவதென தெரியவில்லை நேராக குபேரனை தேடிச் சென்றாள்.

  

”அங்கிள் உங்களுக்கு உங்க பொண்ணு மேல பாசம் இல்லையா, ஏன் அவளுக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கைதுணையை அமைச்சிக் கொடுத்தீங்க”

  

”வேங்கையனை விட சிறந்தவனை கல்யாணம் செய்துக்க நான் நீன்னு பொண்ணுங்க போட்டிப்போட்டாங்க, எங்க அதிர்ஷ்டம் வேங்கையனே எங்களுக்கு மருமகனா வந்தது நாங்க செஞ்ச பாக்கியம்”

  

”ஏன் மூர்த்தி உங்களுக்கு மருமகனா அமைஞ்சா அது அதிர்ஷ்டம் இல்லையா”

  

”மூர்த்தி விசயம் வேற வேங்கையன் விசயம் வேற”

  

”என்ன வேற வேற பொண்ணோட சந்தோஷம்தானே முக்கியம்”

  

”அவளோட சந்தோஷத்துக்காகதான் நாங்க வேங்கையனோட கல்யாணம் செய்து வைச்சோம்”

  

”என்ன இவளோ உறுதியா பேசறீங்க ஆனா, ஜானு இப்ப சந்தோஷமா இல்லையே, அவளும் கஷ்டப்படறா, அழறா, என்னால தாங்க முடியலை அங்கிள்”

  

என சொல்ல அவரோ மென்மையாகச் சிரித்துவிட்டு

  

”வா என்கூட”

  

”எங்க”

  

”வா உனக்கு வேங்கையனை காட்டறேன், அவனை பாரு அப்புறம் நீ பேசு நான் கேட்டுக்கறேன்”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.