(Reading time: 20 - 40 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”ஜானுவுக்காக வந்தேன் பாவம் அவளுக்கு ஆதரவு தரலாம்னு நினைக்கிறேன், அவளோட வாழ்க்கையை சரியாக்கலாம்னு வந்தேன் அங்கிள்”

  

”அப்ப நீ புத்திமதி சொல்லவேண்டியது ஜானகிக்குதான், அவளை வேங்கையனோட சேர்த்து வைக்கறதுதான் நல்லது, ஜானகிக்கு ஏத்தவன் மூர்த்தி கிடையாது” என சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்தாள் மஹதி

  

”வேணி ஆன்ட்டிகூட இப்படித்தான் சொன்னாங்க இதுக்கு என்ன அர்த்தம்“

  

”பெத்தவங்களுக்கு தெரியாதா பொண்ணுக்கு யாரு ஏத்தவன்னு, நாங்கதானே அவளுக்கு உயிரு தந்தோம், நாங்களே எப்படி அவள் வாழ்க்கையை அழிப்போம் சொல்லு”

  

”ஆனா அவள் மூர்த்தியை காதலிக்கிறாளே”

  

”அதெல்லாம் ஒரு காதலா, வேங்கையன் ஜானகியை காதலிச்சது விடவா இவள் காதலிச்சிட்டா, ஏதோ வேங்கையன்கிட்ட பிடிக்காத சில விசயத்தை பெரிசு பண்ணி அவனை வேண்டாம்னு நினைக்கறாளே தவிர மூர்த்தி கூட அவளுக்கு கல்யாணம் ஆகியிருந்தா கண்டிப்பா அவள் வாழ்க்கை நரகமாதான் ஆயிருக்கும், அது அவளுக்கு தெரியலை, புரியற மாதிரி சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறா வீம்புக்காரி”

  

”அய்யோ எனக்கு ஒரே குழப்பமா இருக்கே”

  

”உன் குழப்பத்தை தீர்க்க ஒரே வழிதான் இருக்கு, வேங்கையனையும் மூர்த்தியையும் நீ சந்திக்கனும் அதுவும் ஜானகிக்கு தெரியாம இரண்டு பேரையும் பாரு, அவங்களோட நடவடிக்கைகளை கவனி, முடிஞ்சா அவங்களோட பேசிப்பாரு அப்புறம் தெரியும் யாரு எப்பேர்ப்பட்டவங்கன்னு, ஜானகிக்கு யாரு ஏத்தவங்கன்னு” என சொல்ல ஜானகியின் மீதிருந்த அதீத நம்பிக்கையில் மஹதியோ

  

”ஓ அப்படியா சொல்றீங்க, சரிங்க அங்கிள் நானும் பார்க்கிறேன், இப்பவே என்னைக்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.