கூட்டிட்டுப் போங்க, மூர்த்தி வேங்கையன் இரண்டு பேர்ல யாரு ஜானகிக்கு ஏத்தவங்கன்னு பார்க்கிறேன், ஒருவேளை நீங்க நினைக்கறது சரின்னா ஜானகிகிட்ட பக்குவமா பேசி அவள் மனசை மாத்தப்பார்க்கிறேன், அப்படியில்லாம ஜானகி பக்கம் நியாயம் இருந்தா நான் அவள்பக்கம்தான் நிப்பேன், அதுக்காக உங்களையும் இந்த ஊரையும் எதிர்க்க நான் தயார் அங்கிள்”
”அப்படி சொல்லு எவ்ளோ தைரியமா பேசற, அதே தைரியத்தோட என்னோட வா கிளம்பு” என அழைக்க அவளும் தயங்காமல் குபேரனுடன் சென்றாள். இருவரும் மூர்த்தியையும் வேங்கையனையும் பார்த்து முடித்து வீடு திரும்ப இரவானது.
வேணியோ காத்திருந்தார். குபேரனும் மஹதியும் வரவும்
”இவ்ளோ நேரம் எங்க போய் இருந்தீங்க” என கேட்க குபேரனோ
”மஹதியை தெளிவுபடுத்தி கூட்டிட்டு வரேன்”
”புரியலையே”
”மூர்த்தியையும் வேங்கையனையும் அவளுக்கு காட்டிட்டு வரேன்”
”அப்படியா” என சொல்லியவர் மஹதியை பார்த்து
”என்னம்மா தெளிவாயிட்டியா” என கேட்க அவளோ
”ஓ ரொம்ப தெளிவா இருக்கேன்“
”இப்ப சொல்லு நீ யார்பக்கம்”
”இப்பவும் நான் என் தோழிபக்கம்தான்”
”சே நீயுமா இப்படி பேசற”