(Reading time: 8 - 15 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“பார்த்துங்க அஹல்யா. நீங்க கையில இருக்க பாத்திரங்களை எடுத்துட்டு போய் வைங்க. நான் கீழே கொட்டின பொருளை எடுத்து வைக்கிறேன்,” என சத்யா சொல்லவும், ஒரு வினாடி தயங்கிய அஹல்யா, பிறகு, சத்யா சொல்வது தான் சரி என உணர்ந்தவளாக பாத்திரங்களுடன் சென்றாள்.

  

சத்யா அஹல்யாவின் கைப்பையில் இருந்து சிதறி இருந்த பொருட்களை எடுக்க தொடங்கினாள். பேனா, பில்கள், சில்லறை என்று ஒவ்வொன்றாக எடுத்து பையில் போட்டாள். அஹல்யாவின் பர்ஸும் தனியாக விழுந்திருந்தது. அதனுள் இருந்த கிரெடிட், டெபிட் கார்டுகள், இன்னும் சில கீழே விழுந்திருந்தன. ஒவ்வொன்றாய் எடுத்த சத்யா, அந்த டிரைவிங் லைசன்ஸை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

  

அது மஹாராஷ்டிராவில் வாங்கப்பட்ட டிரைவிங் லைசன்ஸ். மனசுக்குள் எதுவோ உந்த, மேஜை மீதிருந்த அவளின் மொபைலை எடுத்து வேகமாக அஹல்யாவின் அந்த லைசன்ஸை போட்டோ பிடித்தாள்.

  

பின், லைசன்ஸை பர்ஸ் உள்ளே வைத்து விட்டு அஹல்யாவை தேடி சமையலைறைக்கு சென்றாள். அங்கே அஹல்யாவிடம் கேட்டுக் கொண்டு இருக்காமல், தானாக பாத்திரங்களை அடுக்க உதவி செய்தாள்.

  

“என்னால உங்களுக்கு ரொம்ப தொல்லை,” என்றாள் அஹல்யா குரல் நெகிழ!

  

“திரும்ப அதையே சொல்றீங்களே!” சத்யா சின்ன ஸ்மைலுடன் வேலையை தொடர்ந்தாள்.

  

“நீங்க எனக்காக தானே ஸ்டேஷனுக்கு வந்தீங்க! எந்த காரணத்துக்காக இருந்தாலும் அந்த லாயர் இன்ஸ்பெக்டர் சார் கிட்ட அப்படி பேசினப்போ உங்களுக்கு கஷ்டமா தானே இருந்திருக்கும். அது என்னவோ என்னை சுத்தி இருக்கவங்களுக்கும் என்னால கஷ்டம் தான் வந்து சேருது.” வருத்தத்துடன் சொன்னாள் அஹல்யா.

  

சத்யா இதுவரை அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. தென்றல்வாணன் வேலைப் பற்றியும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.