(Reading time: 8 - 15 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அதன் கூடவே வரும் ப்ளஸ், மைனஸ் பற்றியும் அவளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தானோ என்னவோ, ஸ்டேஷனில் நடந்தது அவளின் கவனத்தை எட்டவே இல்லை. அஹல்யா அதைப் பற்றி சொன்னது சத்யாவிற்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

  

குற்றம் செய்த ஒருத்தியால் இப்படி மற்றவர்க்காக அந்த இடத்தில் யோசிக்க முடியுமா என்ன???

  

அஹல்யா தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் சத்யவினுள் உறுதியானது!

  

🌼🌸❀✿🌷

  

த்யா!!!” தென்றல்வாணன் அவளை அழைத்த தோரணையில் இருந்தே அவன் அஹல்யா பக்கத்து போர்ஷன் வந்திருப்பதை தெரிந்துக் கொண்டு விட்டான் என்று சத்யா புரிந்துக் கொண்டாள்.

  

சரவெடி பட்டாசுக்கு தன்னை தயார் செய்துக் கொண்டு கணவன் முன் வந்து நின்றாள்.

  

“ஏன் சத்யா இப்படி செய்துட்டு இருக்க? உனக்கே தெரியும் அஹ்ல்யாவை நான் ஒரு கொலை கேஸ் விஷயமா விசாரிச்சுட்டு இருக்கேன். அவளை இங்கே நம்ம வீட்டுல வாடகைக்கு தங்க விட்ருக்க?” சத்யா எதிர்பார்த்ததுப் போலவே பட பட என பொரிந்தான் தேன்!

  

“விசாரிக்க தானேங்க செய்றீங்க! இன்னும் அஹல்யா தான் குற்றவாளின்னு ப்ரூவ் ஆகலையே. பாவங்க அந்த பொண்ணு. நல்லவளோ கெட்டவளோ, தனியா ஒரு குழந்தையை வச்சுட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்கா. அங்கே சவீதாவும் மத்தவங்களும் சரியா இல்லை. கொஞ்ச நாளைக்கு தான் இங்கே தங்கப் போறா. இருந்துட்டு போகட்டுமே!”

  

“மண்ணாங்கட்டி! எல்லாம் அந்த சக்தியால வந்தது. உன்னை அப்போவே சக்தி கிட்ட பேசக் கூடாதுன்னு நான் தடுத்திருந்திருக்கனும். தப்பு செஞ்சுட்டேன்!”

  

சத்யா அமைதியாக தன் வேலையை தொடர்ந்தாள். எந்த நேரத்தில் அமைதியாக இருக்க

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.