வேண்டும், எந்த நேரத்தில் பேச வேண்டும் என்பதை திருமணமான இத்தனை வருடங்களில் நன்றாகவே கற்று வைத்திருந்தாள்.
அவள் எதிர்பார்த்ததுப் போலவே, அவர்கள் கல்யாணமே தவறு என்று ஆரம்பித்து புலம்பி தீர்த்தான் தென்றல்வாணன்.
சத்யா வாயே திறக்கவில்லை. ரூமில் இருந்து எட்டிப் பார்த்த ஷாலினியிடம் அமைதியாக இருக்க சைகை காட்டினாள் சத்யா.
தென்றல்வாணன் புலம்பி முடித்த பிறகு ஒரு அரை மணி நேரம் அந்த வீடே அமைதியாக இருந்தது.
தட்டில் சுண்டலை எடுத்துக் கொண்டு கணவன் முன் சென்று நீட்டினாள் சத்யா. தென்றல்வாணன் வாங்கிக் கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.
“இங்கே பாருங்க, அதான் என்னை கல்யாணம் செய்துக் கிட்டதே தப்புன்னு ஸ்டார்ட் செய்து திட்டி தீர்த்துட்டீங்களே, அப்புறம் என்ன? இந்த சுண்டலை சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் எனர்ஜியோட திட்டுங்க,” என்றாள் சத்யா!
“நான் உன்னை கல்யாணம் செய்தது தப்புன்னு ஒன்னும் சொல்லலை. நீ என்னை கல்யாணம் செய்தது உங்க அம்மா சொன்ன மாதிரி தப்புன்னு சொன்னேன். நீ எப்படியோ இருந்திருக்க வேண்டியவ சத்யா!”
“என்ன இன்ஸ்பெக்டர் சார் வாய் நீளுது??? யாரை கல்யாணம் செய்துக்குறதுன்னு நான் தான் முடிவு செய்தேன் அதைப் பத்தி நானே ஃபீல் செய்யலை மாப்பிளை சாரும், மாமியாரும் ஒன்னா சேர்த்து ஏன் புலம்புறீங்க? இன்னொரு தடவை இபப்டி பேசினீங்க!!!!!”
“நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற சத்யா. இந்த வேலைல ஆயிரம் டென்ஷன் இருக்கு. நான் ஆயிரம் பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு. ஹையர் அஃபிஷியல்ஸ்ன்னு இல்லாம பொதுமக்களும் கேள்வி கேட்குறாங்க!”