விட்டுப் போனா அதுக்கு அப்புறம் நான் அந்த கல்லூரியை இழுத்து மூட வேண்டியதுதான்”
”அப்படி நடக்காது புதுசா ஒரு பிரின்சிபாலை நியமிக்கலாம்”
”ப்ச் என்ன பேசற நீ உன்னை நான் விடறதாயில்லை“
”புரிஞ்சிக்க ஈஸ்வரா, கல்லூரியோட நிலைமையை பார்த்து பார்த்து எனக்கு பிபி அதிகமாகுது 2 முறை ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி, டாக்டர் வேற அதை இதை சொல்லி பயமுறுத்திட்டாரு, அடுத்த அட்டாக் வந்தா நான் பிழைக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு”
”அப்படியா இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை”
”ஏற்கனவே உனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு இதுல ஆயிரத்து ஒண்ணாவது பிரச்சனையா நான் இருக்க கூடாதுன்னுதான் சொல்லலை, எனக்கு கொஞ்ச நாளுக்கு ஓய்வு வேணும், கல்லூரி பழைய மாதிரி சரியான பின்னாடி வேணா நான் வேலைக்கு வரேனே, அதுவரைக்கும் யாரையாவது பிரின்சிபாலா நியமிக்கலாமே”
”உன் அளவுக்கு திறமைசாலி யார் இருக்கா”
”இருக்கறதாலதானே இவ்ளோதூரம் இறங்கி வந்து பேசறேன்”
”யாரை சொல்ற”
”என் வீட்டுக்கு பக்கத்து வீட்டுல ஒரு நாள் ஒரு பிரச்சனை வந்தது. அந்த வீட்ல ஒரு ஸ்கூல் பொண்ணு படிக்கறா, அவளுக்கு ஏதோ பிரச்சனை போல அந்த பிரச்சனையை அவள் படிக்கற ஸ்கூல் டீச்சர் ஒருத்தவங்க தீர்த்து வைச்சிட்டாங்க, அதைக்கேட்டதில இருந்து எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி, தைரியமா எதுக்கும் பயப்படாம அந்த டீச்சர் இருக்காங்களாம், பேசாம அவங்களையே நாம நம்ம கல்லூரிக்கு பிரின்சிபாலாக்கினா என்ன”
”பள்ளி டீச்சர் எப்படி கல்லூரிக்கு பிரின்சிபாலா ஆக்க முடியும் அது வேற இது வேற