”கண்ணகின்னு பெயர் வைச்சவங்கள்லாம் பத்தினிங்க கிடையாது” என்றான் நக்கலாக அதைக்கேட்டு அவளுக்கு ஒரு மாதிரி கோபமும் ஆவேசமும் வந்தது. ஆனால் அடுத்த நொடியே தனது கோபத்தை குறைத்துக் கொண்டு
”கோவலன்னு பேர் வைச்சவங்க கூட கட்டிகிட்ட மனைவிக்கு உண்மையா நடந்துக்க மாட்டாங்க கடைசியில திருட்டுப்பழியை ஏத்துக்கிட்டு மரண தண்டனை அனுபவிப்பாங்க” என சொல்ல அவனுக்கு ஆத்திரம் வந்தது
”யாரை பார்த்து சொல்ற”
”நான் பொதுவா சொன்னேன், எப்படி நீங்க என் பேரை வைச்சி பொதுவா சொன்னீங்களோ அது போல, நீங்க சொன்னப்ப நான் கோபப்படலையே நீங்க மட்டும் ஏன் கோபப்படறீங்க, அப்போ நான் பொதுவா சொன்னது உங்களுக்கு பொருந்துதா என்ன” என கேட்க அவனுக்கு தலைக்கு மேல் கோபம் வந்தது, ஆனாலும் தாத்தா சொன்னது அப்போது நினைவில் வந்தது இவள் மூலமாக தன்னை வீட்டை விட்டு விரட்டினால் என்ன செய்வது என்ற கலக்கத்தில் தன் கோபத்தை குறைத்துக்கொண்டவன் அவளிடம்
”சர்டிபிகேட்ஸ் இருக்கா” என கேட்க
”உங்களுக்கு மரியாதையா பேச தெரியாதா சார்” என்றாள் அந்த ”சார்” என்பதை அழுத்தமாக உசசரிக்க அதைப்புரிந்துக் கொண்ட கோவலனும்
”சர்டிபிகேட்ஸ் இருக்குங்களா மேடம்” என்றான் அந்த ”மேடம்” என்ற வார்த்தையை வெறுப்பாக உச்சரித்து வைத்தான். அவளும் மெல்லிய புன்னகையுடன் தன் சர்டிபிகேட் பைலை அவனிடம் நீட்ட அதை வெடுக்கென பறித்தான், அவனின் கோபத்தைக்கண்டு கண்ணகி மனதில் சிரித்துக் கொண்டாள்.
சர்டிபிகேட் வாங்கி பிரித்துப் பார்த்தான். நல்ல படிப்பு நல்ல மதிப்பெண் ஏற்கனவே அவள் பள்ளியில் வேலை செய்ததற்கான சான்றிதழ் இருப்பதைக்கண்டு இளப்பமாக சிரித்தபடியே