(Reading time: 35 - 70 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”இது என்ன காலேஜா இல்லை பார்க்கா ரெண்டுத்துக்கும் வித்தியாசமே தெரியலை சார்”

  

”ஓ ஸ்டாப்பிட்” என கத்த அதேநேரம் உதயமூர்த்தி வந்தார்

  

”என்னாச்சி எதுக்கு இந்த கோபம்” என கேட்க அவனோ

  

”நான் கம்பெனிக்கு போகனும், நேரமாகுது இவங்களை நீங்களே பார்த்துக்குங்க நான் கிளம்பறேன்” என சொல்ல அவர் சரியென்றார் இவள் தடுத்தாள்

  

”என்னது கம்பெனியா அப்போ இந்த காலேஜை யார் பார்த்துக்கறது”

  

”அதுக்குதான் உங்களை ஏற்பாடு செய்திருக்காங்களே பிறகென்ன“

  

”என்னை ஏற்பாடு செய்ததுக்கும் நீங்க கம்பெனிக்கு போறதுக்கும் என்ன சம்பந்தம், நீங்க அவசியம் இங்க இருக்கனும்லயா, தாளாளர் இருந்தாதானே மாணவர்களுக்கு பயம் வரும்”

  

“எதுக்கு பயம் வரனும் நான் என்ன சிங்கமா புலியா அவங்களை கடிச்சி சாப்பிடப்போறேனா”

  

”அய்யோ நான் அப்படி சொல்ல வரலை, நீங்க தாளாளர் உங்க பதவி மேல இருக்கற மதிப்புல மரியாதையில மாணவர்களுக்கு பயம் இருந்தாதான் நீங்க போறப்ப வர்றப்ப உங்களுக்கு மரியாதையா வணக்கம் சொல்வாங்க, நீங்க சொல்றதை காதால கேட்டு நடப்பாங்க சார் அதை சொன்னேன்”

  

”ஏன் இப்ப என்னை யாரும் மதிக்கலைன்னு சொல்ல வர்றியா”

  

”தெரியலையே சார் எதுக்கும் நீங்க ஒரு 10 அடி நடந்துப் போய் வாங்க, எத்தனை மாணவர்கள் உங்களை பார்த்து மரியாதையா வணக்கம் வைக்கறாங்கன்னு கவனிச்சி எழுதி வைக்கிறேன்”

  

”எதுக்கு இப்படி செய்யனும்“

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.