சொல்ல அவனோ கடுப்பாகி உதயமூர்த்தியைப் பார்த்து
”என்ன நடக்குது இங்க, இவங்களை பிரின்சிபால் வேலைக்கு வரவழைச்சீங்களா இல்லை எனக்கு பாடம் எடுக்க வரவழைச்சீங்களா” என எரிந்துவிழ அவரோ
”இதப்பாருப்பா, இவங்களை இங்க வேலைக்கு வைக்கனும்ங்கறது உன் தாத்தாவோட எண்ணம், அவரோட பேச்சுக்கு என்னால மறுபேச்சு சொல்ல முடியாது, எனக்கு வயசாயிடுச்சி, இப்பவே 2 முறை ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி அடுத்த முறை வந்தா என்னை காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு, இந்த கல்லூரியோட நிலைமையை பார்க்க பார்க்க எனக்கு உடல்நிலை மோசமாகுது, என்னால இதுக்கு மேல இங்க வேலை செய்ய முடியாது, நான் ரிட்டயர்டு ஆகப் போறேன், எனக்கு பதிலா கண்ணகி இங்க பிரின்சிபாலா வேலை செய்வாங்க இதுல எந்த மாற்றமும் இல்லை, உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் இவங்க இங்கதான் இருப்பாங்க, நான் வந்ததே கண்ணகியை அவங்க இருக்கையில உட்காரவைச்சிட்டு எல்லாருக்கும் அவங்களை அறிமுகம் செய்துட்டு என்னோட ரிட்டயர்மென்ட் ஆர்டர் காப்பியை வாங்கிட்டு போகதான், நான் வந்த வேலையை செய்ய விடுப்பா” என சொல்ல அவனோ
”என்னவோ செய்ங்க நான் இங்க இருக்கனுமா வேணாமா அதை சொல்லுங்க, இங்க நிக்கவே கடுப்பா இருக்கு” என கண்ணகியை பார்த்து கோபமாகச் சொல்ல அவளோ மென்மையாக சிரித்து
”ஒரு கல்லூரி தாளாளர் தானே பிரின்சிபாலை பத்தி எல்லாருக்கும் அறிமுகப்படுத்தனும் நீங்களே போயிட்டா எப்படி சார் வாங்க” என அழைக்க
”எங்க”
”எப்படியும் எல்லாரும் வெளியதானே இருக்காங்க இங்கயே என்னை அறிமுகப்படுத்தி வைங்க நான் வேலையில சேர்ந்துக்கறேன்“
”இன்னும் நான் உன்னை வேலையில சேர்த்துக்கிட்டேன்னு சொல்லலையே“
”ஓ ஆமாம்ல சரி சொல்லுங்க சார், உங்களுக்கு வேற ஆப்ஷன் இல்லைன்னு நினைக்கிறேன்”