”எங்கய்யா மைக்கு“ என கேட்க
”சார் காணலை சார்” என சொல்ல அவரோ நொந்துப் போனார்
”இவ்ளோ பேருக்கு கேட்கற மாதிரி எப்படி பேசறது, மைக் காணாம போயிருக்கு அதை கூட யாரும் கவனிக்க மாட்டாங்களா” என ப்யூனிடம் எரிந்து விழுந்தான் கோவலன் அதற்கு கண்ணகியோ
”தலைமை நிர்வாகம் சரியா இருந்தாதானே கீழே வேலை செய்றவங்க சரியா இருப்பாங்க” என நக்கலாகச் சொல்ல அவனோ அவளை முறைக்க
”இல்லை சார் ஒருவேளை மாணவர்கள் யாராவது சுதந்திரமா மைக்கை எடுத்து வைச்சிக்கிட்டாங்களோ என்னவோ” என சொல்ல அவனோ
”ப்ச் சரி மைக் வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்”
”எனக்கு மைக்கெல்லாம் வேணாம் சார் நான் பேசறேன்”
”எப்படி முடியும் இது எவ்ளோ பெரிய கட்டிடம் தெரியுமா, கடைசி வரிசையில இருக்கற மாணவனுக்கும் கேட்கற மாதிரி பேசனும்னா தொண்டை கிழிஞ்சிடும்”
”என் தொண்டைதானே கிழியும் நீங்க ஏன் எனக்காக அக்கறைப்படறீங்க சார்”
”எனக்கு ஒண்ணும் உன் மேல அக்கறையில்லை நிலைமையை எடுத்துச் சொன்னேன் அவ்ளோதான்” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்துவிட்டு மாணவர்களைப் பார்த்தாள். ஒரே கூச்சல் சத்தம் அதைக்கண்ட உதயமூர்த்தி
”அமைதி அமைதி ஸ்லைன்ட், அட பேசாம இருங்க, யார் வந்திருக்காங்கன்னு பாருங்க, அமைதிங்கறேன்ல ஹலோ தம்பி உட்காரு ஏன் நிக்கற, அங்க என்ன கதை எதுக்கு இந்த சிரிப்பு, அமைதியா இருங்க, ஆசிரியர்கள் என்னதான் செய்றீங்க மாணவர்களை கட்டுக்குள்ள