அதுவரைக்கும் நான் உங்களுக்கு உதவி செய்றேனே சொல்லுங்க சார் என்ன செய்யனும்“
”அப்போ நீ ஆடிட்டோரியத்துக்கு போய் பாரும்மா, அது எந்த நிலைமையில இருக்கோ” என சொல்லிவிட்டு செல்ல கண்ணகிக்கு சிரிப்பாக இருந்தது
”சரியா போச்சி என்னை ஒரு வேலைக்குன்னு கூப்பிட்டு இப்ப பலவேலைகளை தர்றாங்களே சரி செய்வோம்” என நினைத்துக் கொண்டே ஆடிட்டோரியத்துக்கான வழியை கேட்டுக் கொண்டே அவ்விடம் சென்றாள்.
பெரிய அளவு கட்டப்பட்ட ஒரு கட்டிடம் ஆயிரம் மாணவர்கள் கூட அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த ஆடிட்டோரியம். பல நாட்களாக அந்த இடம் சும்மாவே இருந்திருக்கும் போல, ஆங்காங்கு ஒட்டடைகளும் தூசியும் தும்புமாக அந்த இடமே சுத்தமின்றி இருக்க அவள் சற்றும் யோசிக்காமல் அங்கிருந்த ஒட்டடை கொம்பால் ஒட்டடை அடித்து சுத்தம் செய்யலானாள்.
அவள் அப்படி செய்யும் போதே மாணவர்களும் ஆசிரியர்களும் வர தொடங்கினார்கள், அவள் வருபவர்களை பார்த்தும் தன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வந்தவர்கள் அவளை இளப்பமாக பார்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார்கள். கடைசியாக வந்த உதயமூர்த்தியும் கோவலனும் கண்ணகியின் செயலைக்கண்டு அதிர்ந்தார்கள். உதயமூர்த்தி அவசர அவசரமாக கண்ணகியை தேடிச் செல்ல கோவலன் அப்போதுதான் அந்த ஆடிட்டோரியத்தின் மோசமான நிலைமையைக்கண்டு நொந்துப் போனான்.
அதற்குள் உதயமூர்த்தி கையோடு கண்ணகியை அழைத்துக் கொண்டு மேடையில் ஏறினார்.
மாணவர்கள் சலசலவென பேசிக் கொண்டு இருக்க ஆசிரியர்கள் அவர்களை கட்டுப்படுத்தாமல் அவர்களும் கதைகளை பேசிக் கொண்டும் செல்போனில் விளையாடிக் கொண்டும் இருந்தார்கள். அதைக்கண்டு கோவலனுக்கு வெறுப்பே வந்தது, அவன் அலுத்துக் கொள்ள ப்யூனோ மைக் எங்குள்ளது என தேடி அலைந்து திரிந்து வெறும் கையுடன் வந்து நின்றான் உதயமூர்த்தியோ