என சொல்ல அவனோ கடுப்பாகி உதயமூர்த்தியிடம்
”எல்லாரையும் ஆடிட்டோரியத்தில அசம்பிள் ஆக சொல்லுங்க” என கட்டளையிட்டு விட்டு அவன் உள்ளே அவனது அறைக்குச் செல்ல அதைக்கண்ட கண்ணகியோ உதயமூர்த்தியிடம்
”சார் தப்பா நினைக்காதீங்க மாத்த வேண்டியது காலேஜை இல்லை தாளாளரை”
”தெரியும்மா நீ ரெண்டுத்தையும் மாத்திடு”
“இது வேறயா ஏன் சார் இப்படி? என்னை இவர்கிட்ட மாட்டிவிடறீங்க“
”என்ன செய்றதும்மா, அவனோட அப்பா அம்மா ஒரு கார் விபத்தில இறந்துட்டாங்க அப்ப இருந்து அவன் முரட்டுத்தனமா நடந்துக்கறான், அவனோட தாத்தாவுக்கும் உடம்பு சரியில்லை, சுகர் அதிகமாயிடுச்சி, அவர்தான் தாளாளரா இருந்தாரு இப்ப இவன் இருக்கான், கண்ணகி நான் ஒண்ணு சொல்றேன் நீ மறுக்க கூடாது”
”என்னது சார்”
“இவனையும் இந்த கல்லூரியையும் உன் பொறுப்பில ஒப்படைக்கிறேன், இரண்டையும் திருத்தி நல்வழிப்படுத்தறது உன்னோட கடமை செய்வியாம்மா”
”கண்டிப்பா சார் செய்றேன்” என சொல்ல அவரோ
”சரி நான் போய் எல்லாரையும் ஆடிட்டோரியத்தில அசம்பிள் ஆக்கிட்டு வந்து உன்னை கூப்பிடறேன்”
”அதுவரைக்கும் நான் எங்க இருக்கறது”
“நீ பிரின்சிபால் அறையில உட்காரும்மா”
”இல்லை சார் இன்னும் நான் வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் தரலை