அனைவருமே அமைதியாக நின்றார்கள்.
அந்த அமைதியை ரசித்தான் கோவலன். கண்ணகியோ மாணவர்களைப் பார்த்துவிட்டு தாளாளரை பார்த்து
”வாங்க” என்றாள் உடனே அவன் புரிந்துக் கொண்டு கண்ணகி பக்கம் நின்று மாணவர்களைப் பார்த்து
”இவங்க பேரு கண்ணகி இனிமேல இந்த காலேஜ்க்கு இவங்கதான் பிரின்சிபால், பழைய பிரின்சிபால் ரிட்டயர்டு ஆயிட்டாரு” என தகவல் சொல்ல அதைக்கேட்டு மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி சலசலவென பேசிக் கொள்ள கண்ணகி கோவலனிடம்
”இனிமேல நான் பார்த்துக்கறேன் சார் நீங்க போய் உட்காருங்க” என சொல்ல அவனோ இவள் என்ன செய்வாள் என தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் அமர்ந்தான்.
கண்ணகியோ
”அமைதி” என்றாள் சத்தமாக, அந்த சத்தம் மைக்கு கூட தேவையில்லை என நினைத்தான் கோவலன் கடைசி வரிசையில் இருந்த மாணவன் கூட அந்த அமைதி என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியானான்.
”நான் சொல்றதை திருப்பிச் சொல்லுங்க” என அதட்ட மாணவர்கள் விழித்தார்கள்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
என்றாள் அதைக்கேட்டு அனைவரும் அமைதியாக நிற்க அவள் மறுபடியும் சத்தமாக
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
என்றாள் அதைக்கேட்டு மாணவர்கள் சிலர் திருப்பிச் சொன்னார்கள் அடுத்த வரியை அவள் சொன்னாள்