(Reading time: 35 - 70 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

மாணவர்கள் ஒழுக்கமில்லாம நடந்தா அவங்களுக்கு டிசி தரப்படும், அந்த டிசியில குட் என்கிற வார்த்தைக்கு பதிலா பேட் என்கிற வார்த்தையை எழுதிட்டேன்னா எந்த காலேஜலயும் சீட் தரமாட்டாங்க, அதை எல்லாரும் மனசுல வைச்சிக்கிட்டு எல்லாரும் அவங்கவங்க வகுப்புக்கு போங்க, சொன்னது நினைவிருக்கட்டும் நான் சொன்னதை செய்றவங்க போகலாம்” என கண்ணகி கம்பீரமாக பேசி அதட்டவும் அந்த இடமே அரண்டது.

  

மாணவர்களும் அவசர அவசரமாக தங்கள் வகுப்பு நோக்கிச் சென்றார்கள் ஆசிரியர்களோ உதயமூர்த்தியிடம் வந்து

  

”என்ன சார் இது, பார்க்க சின்ன பொண்ணு போல இருக்கு இவங்களை போய் பிரின்சிபாலா ஆக்கி வைச்சிருக்கீங்க, இவங்க கீழே எப்படி சார் நாங்க வேலை செய்றது எங்களுக்கு அவமானமா இருக்கு” என சொல்ல அதைக்கேட்ட கண்ணகியோ

  

”என் வயசை பார்க்காதீங்க, திறமையை பாருங்க, என் கீழே வேலை செய்ய சொல்லலை இந்த கல்லூரியில வேலை செய்ய சொல்றேன், அவ்ளோதான்” என சொல்ல அவர்களும் வெறுப்பாக கிளம்பிச் சென்றார்கள்.

  

உதயமூர்த்தியும் பெரிய பாரம் இறங்கியது போல நிம்மதியாகி கண்ணகியிடம் வந்தார்

  

”அவங்க பேசினதை நீ பெரிசா எடுத்துக்காதம்மா”

  

”இல்லை சார் அவங்க பொறாமையில பேசறாங்க, இப்போ பேசிட்டு போனவங்கள்ல ஒருத்தரை பிரின்சிபாலா ஆக்கினா கூட இந்த கல்லூரியை திருத்த முடியாது நீங்க கவலையேப்படாதீங்க, நான் இந்த கல்லூரியை பார்த்துக்கறேன் சார்” என உறுதியாகச் சொல்ல அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது, உடனே அவளை அழைத்துக் கொண்டு சென்று பிரின்சிபால் அறையில் இருந்த இருக்கையில் அமரவைத்து அழகு பார்த்தவர் அவளுக்கான ஆர்டர் காப்பியை தர அவளோ

  

”இதை தாளாளர்தானே தரனும் சார்” என சொல்ல அதற்கு அவரோ

  

”வாஸ்தவம்தான் ஆனா தம்பி ரொம்ப கோபமா இருக்காப்ல“

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.