இருக்கலாம் இதே தலை விழுந்தா தாத்தா சொல்படி கண்ணகிக்கு இங்க பிரின்சிபால் வேலையை தரலாம்” என சொல்லிக் கொண்டே நாணயத்தை சுண்டினான்.
அது தலை பக்கம் நின்றது. அதைக்கண்டவன் வெறுப்புடன் இருந்தான் அந்நேரம் கண்ணகி உள்ளே வந்து அவன் முன் முகம் மலர்ச்சியுடன் நின்றாள். கோவலன் அவளின் மலர்ச்சியைக்கண்டு வெறுப்புற்று உதயமூர்த்தி தன்னிடம் தந்த ஆர்டர் காப்பியை வாங்கி அவளிடம் நீட்டினான். அவளும் அதை வாங்கிக் கொண்டு
”நன்றி சார்” என்றாள். அதைக்கேட்டு அவனோ
”இப்பவாவது நான் கம்பெனிக்கு போகலாமா இல்லை உன் பின்னாடியே அலையனுமா”
”வேணாம் சார் நீங்க போகலாம்”
”என் நேரம் உன்கிட்ட அனுமதி வாங்க வேண்டியதா போச்சி”
என அலுத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். அவன் சென்றதும் வெளியே வந்த கண்ணகியிடம் உதயமூர்த்தியோ
”இதப்பாரும்மா இங்க உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலோ இல்லை ஏதாவது சந்தேகம் வந்தாலே என்கிட்ட உதவி கேட்கலாம்”
”அதான் வைஸ் பிரின்சிபால் இருக்காரே அவர்கிட்ட நான் உதவி கேட்டுக்கறேன் சார்“
”கோவலனோட நண்பன்தான் இப்ப வைஸ் பிரின்சிபாலா இருக்கற சிலம்பரசன்“
“ஓ அப்ப தாளாளருக்கு விசுவாசின்னு சொல்லுங்க“
”அதேதான் அவன்கிட்ட நீ உதவி கேட்கறது வேஸ்ட்”
”ஓகே சார் நான் உங்ககிட்டயே உதவி கேட்கறேன்”