(Reading time: 35 - 70 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”நல்லதும்மா நீ என்கிட்ட உதவி கேட்க தயங்காத, எந்த நேரமாயிருந்தாலும் சரி உனக்கு உதவ நான் காத்திருக்கேன், இது என்னோட போன் நெம்பர் வைச்சிக்க ஏதாவதுன்னா போன் பண்ணும்மா” என சொல்லிவிட்டு அவளிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்.

  

கண்ணகியும் தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள் இதுவரை அனைத்தும் நலமாக இருந்தது, ஆனால் வைஸ் பிரின்சிபாலாக இருந்த கோவலனின் நண்பன் சிலம்பரசனுக்கு கண்ணகியின் வரவு சுத்தமாக பிடிக்கவில்லை, உதயமூர்த்தி சென்றதும் அந்த இடத்திற்கு வர காத்திருந்தான், ஆனால் தனது ஆசை கனவு அனைத்தையும் ஒரு நொடியில் நொறுக்கிவிட்ட கண்ணகியை பழிவாங்க துடித்தான்.

  

எப்படியாவது கண்ணகியின் மீது அவதூறு கிளப்பினால் உடனே அவளது வேலை பறிபோகும் அடுத்த பிரின்சிபால் தான்தான் என்ற மமதையில் உடனே களத்தில் இறங்கினான் அதற்காகவே ஆசிரியர்கள் சிலரிடம் கலந்துரையாடினான்.

  

கண்ணகி வந்தது அனைத்து ஆசிரியர்களுக்கும் பிடிக்கவில்லை, வெறுத்தார்கள், அதனால் சிலம்பு சொன்னதை கேட்டு நடந்தார்கள், அதன்படி ஆசிரியர்களும் வகுப்புகளுக்கு சென்று அந்தந்த வகுப்பில் இருக்கும் சில தகராறு பிடித்த மாணவர்களை திரட்டி அவர்களை உசுப்பிவிட்டார்கள்.

  

அந்த மாணவர்களும் எதிர்காலத்தை பற்றி கவலைக்கொள்ளாமல் மற்ற மாணவர்களிடம் பேசி மறுநாளே காலேஜ் ஸ்ட்ரைக் செய்ய வேண்டும் என முடிவு எடுத்தார்கள், இந்த விசயம் வதந்தி போல அனைத்து மாணவர்களிடமும் சென்று சேர்ந்தது, அப்படியே அந்த விசயம் ப்யூன் காதிற்கு எட்டி அவரும் அதை கண்ணகியிடம் சொல்ல அவளுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒருங்கே வந்தது ”என்னது ஸ்ட்ரைக்கா” என நினைத்து அதற்கு என்ன செய்ய வேண்டும் என அப்போதே யோசிக்கலானாள்.

  

அவளுக்கு எந்த இடத்தில் இருந்து ஆரம்பிப்பது என தெரியவில்லை, சில மணி நேர யோசனைக்குப்பின் அவளுக்கு ஒரு திட்டம் உதயமானது, அதற்கு உதயமூர்த்தியின் உதவி தேவை என்பதால் அவருக்கு போன் செய்து காலேஜ் ஸ்ட்ரைக் விசயமும் அதற்காக அவள்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.