”அதுக்காக வழக்கத்தை மாத்திக்கலாமா நீங்க போய் அவரை பாருங்க நான் பின்னாடியே வர்றேன்” என சொல்ல அவரும் கோவலனைக்காணச் சென்றார்.
கண்ணகியோ அந்த அறையை சுற்றி முற்றி பார்த்துவிட்டு வெளியேற ப்யூன் வந்து நின்றான்.
”மேடம் என் பேரு கந்தசாமி மேடம் நான் 15 வருஷமா இங்க வேலை செய்றேன் மேடம்”
”ஓ அப்படியா”
”ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க மேடம் செய்றேன்”
“சரி கூப்பிடறேன்” என சொல்லியவள் தாளாளர் அறைக்குச் சென்றாள்.
அதற்குள் கோவலனோ தன் அறையில் நடந்ததைக்கண்டு குழம்பியிருந்தான்.
”எப்படி இவளால இப்படி சட்டுன்னு கல்லூரியை மாத்த முடிஞ்சது, திறமைசாலியா இருக்காளே ஆனாலும் திமிர்பிடிச்சவளா இருக்காளே, இவளை நாம பிரின்சிபால் வேலைக்கு வைக்கலாமா வேணாமா” என யோசித்தான் முடிவு எடுக்க இயலவில்லை
”கண்ணகியை பிரின்சிபால் ஆக்கினா கண்டிப்பா கல்லூரி மாறும், மாணவர்களும் ஒழுக்கமா இருப்பாங்க அதுல சந்தேகமில்லை, ஆனாலும் அவள் நமக்கு அடிபணிஞ்சி நடக்க மாட்டாளே, நம்மளை மிஞ்சி நடந்து நம்மளையே கேவலமா நடத்தினா, இப்ப கூட நம்மளை நிறைய முறை அவமானப்படுத்திட்டா, இவளை விட்டா அப்புறம் தினம் தினம் நம்மளை அவமானப்படுத்திக்கிட்டே இருப்பா, கூடாது இவளை விடக்கூடாது, ஆனா தாத்தா கண்டிப்பா சொல்லிட்டாரே அவர் பேச்சையும் மீற முடியாது, என்ன செய்யலாம் ஏது செய்யலாம்” என பலமாக யோசித்து சட்டென ஒரு ரூபாய் நாணயத்தை கையில் எடுத்தான். அதை சுண்டும் போதே
”பூ விழுந்தா கண்ணகியை வேலையை விட்டு அனுப்பிடலாம் அவளால நாம அவமானப்படாம