”நடக்கறது நாடகம்னு எங்கப்பாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான், ருத்ரதாண்டவம் ஆடிடுவாரு”
”பயப்படாதீங்க நான் பார்த்துக்கறேன்” என சொல்லிய நேரம் புயலென உள்ளே நுழைந்தாள் ஜானகி.
முதலிரவு அன்று அவனது அறைக்குள் நுழைந்தாள், அடுத்த நாளே தனக்கென ஒரு அறையை ஒதுக்கிக் கொண்டு அதில் இருந்தாள். இப்போது மஹதிக்காக அவள் உள்ளே நுழைய வேங்கையனோ ஆர்வத்துடன் அவளிடம்
”கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே ஜானகி, எதுக்காக கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் நீ வரனுமா என்ன” என பேசி வைக்க அவளோ கோபத்தில் முறைத்து
”உங்களை பார்க்க யார் வந்தது, நான் மஹதியை பார்க்க வந்தேன்” என சொல்லியவள் இன்னும் வேங்கையன் மஹதியின் கையை பற்றியிருப்பதைக் கண்டு சிடுசிடுத்தாள்
”அவள் என்ன குழந்தையா இல்லை காணாம போயிடுவாளா, இன்னும் ஏன் அவள் கையை நீங்க பிடிச்சிருக்கீங்க விடுங்க அவளை” என சொல்லிய பின்புதான் வேங்கையன் உணர்ந்து சட்டென மஹதியை விட்டுவிலகி நின்றான், மஹதிக்கு அது ஏமாற்றமாக இருந்தது இருப்பினும் ஜானகியை பார்த்து
”அக்கா” என அன்புடன் அழைக்க ஜானகிக்கு தூக்கிவாரிப் போட்டது
”அக்காவா நான் உனக்கு அக்காவா” என கோபத்தில் பொங்க
”ஆமாம் அக்கா, நீங்கதான் இந்த வீட்டுக்கு முதல்ல வந்த மூத்த மருமகள், நான் இன்னிக்கு வந்த சின்ன மருமகள், ஒரே வயசா இருந்தாலும் உறவு முறை வரும் போது நான் உங்களுக்கு மரியாதை தரனும்லயா அக்கா” என சொல்ல அவளோ குழம்பினாள்
”நீயா இப்படி பேசறது” என கேட்க மஹதி உடனே கண் சிமிட்டினாள், அதில் ஜானகிக்கு ஒரு