(Reading time: 19 - 37 minutes)
Chinna marumagal
Chinna marumagal

மாதிரியாகிப் போனது, சட்டென வராத இருமலை வரவழைத்து இருமினாள் மஹதி அதைக் கண்ட வேங்கையனோ பதறி

  

“என்னாச்சி” என கேட்க மஹதியோ

  

”குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா மாமா” என்றாள் அவள் தன்னை மாமா என அழைக்கவும் அவன் ஒரு நொடி விக்கித்துப் போய் அடுத்த நொடியே இவ்வனைத்தும் நாடகம்தானே என நினைத்து சிரித்த முகத்துடன்

  

”இதோ இப்பவே கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறிச் சென்றான். அவன் சென்றதும் மஹதி அவசரமாக அந்த அறைக்கதவை சாத்தி தாள்பாள் போட்டுவிட்டு ஜானகியிடம் வந்து நின்றாள்

  

”மஹதி என்னடி நடக்குது இங்க”

  

”ஷ்ஷ் கத்தாத ஜானு, எல்லாம் உனக்காகத்தான் இந்த ட்ராமா”

  

”ட்ராமாவா“

  

”ஆமாம்“

  

“என்னடி சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியலைடி”

  

”நேத்து நீ என்னை பார்த்துட்டு போன பின்னாடி உன் அப்பாவும் அம்மாவும் என்னை பிடிச்சி வைச்சி நிறைய கதைகளை சொன்னாங்க, வேங்கையனை பத்தியும் மூர்த்தியை பத்தியும் சொன்னாங்க, அவங்க சொன்னதைக கேட்டு நான் அசந்துப்போயிட்டேன், எப்படியாவது ஜானகியை வேங்கையனோட சேர்த்து வைக்க வேண்டியது உன்னோட பொறுப்புன்னு என்னை இதுல இழுத்துவிட்டாங்க ஜானு“

  

”அய்யோ அப்புறம் நீ என்ன சொன்ன உடனே சரின்னு சொல்லிட்டியா”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.