(Reading time: 7 - 14 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

போய் அதெல்லாம் பார்க்கிறேன். ஏதாவது உதவி தேவைப்பட்டா எனக்கு தயங்காம ஃபோன் செய்ம்மா.” பிரசாத் தன் அறை இருந்த திசையில் நடந்தார்.

  

ரிசப்ஷனை நெருங்கி இருந்த சத்யாவும், சக்தியும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள்.

  

“இதே ஃபார்ம்ல அப்படியே போய் உன் ஃபிரென்ட் பர்வீன் கிட்டேயும் பேசிடு சத்யா. நாம அப்புறமா நோட்ஸ் ஷேர் செய்துப்போம்!” சக்தி சத்யாவிடம் ரகசியமாக சொன்னாள்.

  

சத்யாவும் அதையே செய்தாள்!

  

டாக்டர் பிரசாத் போலவே பர்வீனும் தன்னுடன் வேலை செய்யும் பெண்கள் சிலரிடம் அவர்கள் லிஃப்ட்டில் இருந்து பேசியதை பற்றி சொன்னதாக ஒப்புக் கொண்டாள்.

  

பர்வீன் மட்டுமல்லாமல் சவீதாவும் கிட்டத்தட்ட அதையே தான் சொன்னாள்.

  

“அந்த லெட்டரைப் பார்த்த உடனே டென்ஷன் ஆயிட்டேன் சத்யா! இன்ஸ்பெக்டர் வந்து அதை வாங்கிட்டுப் போனாலும் என்னால சும்மா இருக்க முடியலை. இங்கே பக்கத்துல எனக்கு தெரிஞ்ச எல்லோர் கிட்டேயும் அதைப் பத்தி சொல்லி பத்திரமா இருக்க சொன்னேன்.”

  

“எல்லோர் கிட்டேயுமா???” சத்யாவால் நம்பக் கூட முடியவில்லை!

  

“ஆமாம் சத்யா. இதெல்லாம் சொல்லி வைக்கனும்! அப்புறம், உனக்கு விஷயம் தெரியுமா? அந்த அஹல்யா இங்கே இருந்து போயிட்டா. இன்ஸ்பெக்டர் சார் வந்து மிரட்டினாருன்னு நினைக்கிறேன். பயந்து போயிட்டா போலருக்கு!”

  

“எங்கே போனாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?” சிரிக்காமல் சீரியஸாக கேட்ட சக்தியைப் பார்த்து முறைத்தாள் சத்யா!

  

“அது தெரியலைங்க சக்தி. வேலைல கொஞ்சம் பிஸியா இருந்தேன் அதனால தெரிஞ்சுக்கலை,” என்றாள் சவீதா.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.