“வேற ஆங்கிள்னா? எப்படி??? ஹேய் சக்தி சொல்ல மறந்துட்டேனே! நேத்து அவரு ரொம்ப நேரம் உட்கார்ந்து யோசிச்சு ஏதேதோ எழுதிட்டு இருந்தாரு. அவர் எழுதினதுல சில விஷயங்க கீழே இருந்த பேப்பர்ல அச்சா இருந்துச்சு. அதுல அவர் நோட் செய்திருந்த ஒரு விஷயம் சேகரன் உடம்புல இருந்த அந்த எக்ஸ்ட்ரா காயம் பத்தினது. அது எப்படி வந்துச்சுன்னு போலீஸ் இன்னும் கண்டுப்பிடிக்கலைன்னு நினைக்கிறேன். அபினவ் கேஸ் ஃபைல் விபரம் சொன்னப்போ அப்படி தான் இருந்துச்சு.”
“மே பீ தேன் டாக்டர் கிட்ட அதைப் பத்தி எக்ஸ்ட்ராவா தகவல் கேட்க ப்ளான் செய்றாரா இருக்கும்.”
“இருக்கலாம்! நாம என்ன செய்றது சக்தி?”
“நமக்கு இருக்க ஒரே லீட் அஹல்யா தான்! அஹல்யா நம்ம கிட்ட உண்மை எல்லாத்தையும் சொன்னா நம்ம வேலை ஈசியா இருக்கும்.”
“அஹல்யா எதையோ மறைக்குறாங்கன்னு நினைக்குறீயா?”
“நீயே சொல்லு சத்யா. உனக்கு அஹல்யா பத்தி என்ன தெரியும்?”
“அஹல்யா வேற ஊருல இருந்து இங்கே மதியூருக்கு அருணோட வந்தாங்க. அருண் அப்பாவும் அவங்களும் டிவோர்ஸ் வாங்கிட்டாங்க. இங்கே டாக்டர் பிரசாத்தோட ஹெல்ப்ல வேலை வாங்கி இருக்காங்க. அவங்களுக்கு ஹெல்ப் செய்றேன்னு தொல்லை செய்த சேகரன் செத்துப் போயிட்டான். அதனால அஹல்யா மாட்டிட்டு முழிச்சுட்டு இருக்காங்க. இப்போ அபினவ் வழியா அவங்க வாழ்க்கைல ஒரு டர்ன் வந்திருக்கு. சீக்கிரமே அபினவை கல்யாணம் செய்துட்டு செட்டில் ஆகப் போறாங்க! அண்ட் தென் தே லிவ்ட் ஹாப்பிலி எவர் ஆஃப்டர்!”
“ப்ச்! ஹுஹும்! சம்திங் இஸ் மிஸ்ஸிங்! அஹல்யா எங்கே இருந்து இந்த ஊருக்கு வந்தா? ஏன் வந்தா?”