“அஹல்யாவோட பர்ஸ்ல இருந்துச்சு சக்தி. எதுக்கும் இருக்கட்டும்னு மொபைல் கேமரால போட்டோ பிடிச்சு வச்சேன்.”
“சத்யா, நீ ஹவுஸ்வைஃப்பா இருக்க வேண்டியவளே கிடையாது! போலீஸ் டிபார்ட்மெண்டோட எலைட் இன்வெஸ்டிகேஷன் ஆபிசரா இருந்திருக்க வேண்டியவ. சான்ஸே இல்லை. எக்ஸலன்ட்!!!”
“ஹம்மாடியோ! அப்படியே தேன் வந்து காதுல பாயுது! இன்னும் சொல்லு, நிறைய சொல்லு!!!!!” வாயெல்லாம் பல்லாக சொன்னாள் சத்யா
“எது தென்றல்வாணன் பேருல இருக்க தேனா?” கேட்டுக் கொண்டே, சக்தி சத்யாவின் மொபைலில் இருந்த போட்டோவை தன்னுடைய மொபைலுக்கு அனுப்பி வைத்தாள்.
“இதை வச்சு என்ன செய்யப் போற சக்தி?” சத்யா சக்தியின் கேலியை விடுத்து, அவளின் செய்கையை பற்றி மட்டும் கேட்டாள்.
“அஹல்யா யாரு? மும்பைல என்ன செய்துட்டு இருந்தான்னு கண்டுப்பிடிக்கப் போறேன்!”
“மும்பை எங்கேயோ இருக்கே. எப்படி கண்டுப்பிடிப்ப? மும்பைக்கு போகப் போறீயா?”
“நான் எக்ஸ் போலீஸ் சத்யா. நிறைய ஃபிரென்ட்ஸ் வச்சிருக்கேன். நான் அங்கே போகனும்னு அவசியமே இல்லை. என்னோட ஃபிரென்ட் ஒருத்தன் மும்பைல ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி வச்சிருக்கான். அவன் கிட்ட இந்த போட்டோவை அனுப்பி அஹல்யா பத்தி தெரிஞ்சுக்கப் போறேன்!”
🌼🌸❀✿🌷
“சார்!” கான்ஸ்டபில் விஜயன் பவ்யமாக தென்றல்வாணன் மேஜை பக்கம் வந்து நின்றார்.