(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“சர்டிஃபிகேட் டவுன்லோட் செய்து காட்டுறேன். அப்போவாவது நம்புவீங்களா?”

  

“ஒருவேளை நம்பலாம்!”

  

“நான் உங்க ஃபேன் அதாவது ரசிகன் சக்தி! நம்ம முதல் சந்திப்பு நல்ல விதமா அமையலை அதான் இதைப் பத்தி இதுவரை பேசினது இல்லை!”

  

“ரசிகர்களாம் இருக்க அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை!” என்ற சக்தி, மீண்டும் அவன் பக்கம் பார்வையை திருப்பினாள்!

  

“தீக்ஷா ஞாபகம் இருக்கா உங்களுக்கு?” சாந்ததுரை ரகசியம் பேசுபனைப் போலக் கேட்டான்!

  

அதுவரை தோட்டத்தில் மெதுவாக நடந்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்த சக்தி சட்டென்று நின்றாள்.

  

அந்தப் பெயர் அவளுக்கு எப்படி மறக்கும்!! பத்து வயது சிறுமியை காணவில்லை என்று வந்த புகார் அது. பாதி உயிர் ஊசலாடும் நிலைமையில் சிறுமியை கண்டுப்பிடித்தார்கள். அவள் இருந்த கோலம் எந்த ஜென்மத்திலும் சக்தியால் மறக்க முடியாது. அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அப்படியே சாகட்டும் என்று நினைத்து விட்டு விட்டுப் போயிருந்தார்கள்.

  

இப்போது நினைக்கும் போதும் அவளுடைய ரோமங்கள் கூச்செடுத்து குத்திட்டு நிற்பது போன்று விரைந்து, நிமிர்ந்து நின்றது!

  

அந்த சிறுமியின் நிஜப் பெயர் எந்த செய்தியிலும் வெளியாகவே இல்லையே?

  

சக்தி சந்தேகம் நிறைந்த கண்களுடன் சாந்ததுரை பக்கம் பார்த்தாள்.

  

“தீக்ஷாவோட அம்மா ஒரு ஹார்ட் பேஷன்ட். நிறைய வருஷமாவே என்னோட பேஷன்ட். எனக்கு தீக்ஷாவை நல்லா தெரியும்.” சக்தியின் கண்கள் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தான் சாந்ததுரை.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.