(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

சக்தி அமைதியாக இருந்தாள்.

  

“நடந்தது தெரிஞ்சப்போ என் ரத்தம் அப்படியே கொதிச்சது சக்தி. பச்சைக் குழந்தைன்னு பார்க்காம அவக் கிட்ட அப்படி நடந்துக்கிட்டவங்களை வெட்டிப் போட்டா என்னன்னு கோபம் வந்துச்சு. நான் நினைச்சதை நீங்க செஞ்சீங்க. அவனுங்க கை கால்ல சுட்டுப் பிடிச்சு ரோட்டுல இழுத்துட்டு வந்தீங்க பாருங்க. ரொம்ப சரியா செஞ்சீங்க. ஹாட்ஸ் ஆஃப் சக்தி!”

  

அப்படி செய்ததற்காக எத்தனை பேரிடம் எத்தனை முறை விளக்கங்கள் கொடுக்க வேண்டி இருந்தது என்பது சக்திக்கு தான் தெரியும்! அவள் அதைப் பற்றி வருத்தப் படவில்லை. சரி என்று நினைத்ததை செய்தாள். எத்தனையோ மிரட்டல்கள், தடைகளை தாண்டி அந்த கயவர்களுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுத்தாள்.

  

“அதனால ஒரு பிரயோஜனமும் கிடையாது. இந்த மாதிரியான குற்றங்கள் நடக்காம தடுக்குறது தான் நல்லது!” சக்தி கசப்புடன் சொன்னாள்.

  

“ட்ரூ. அதுக்கு உங்களை மாதிரி போலீஸ் வேணும்! நீங்க வேலையை ரிசைன் செய்திருக்க கூடாது சக்தி. உங்களை பத்தி சின்னதா நியூஸ் வந்தா கூட ஃபாலோ செய்வேன். திடீர்னு நீங்க ரிசைன் செய்துட்டீங்கன்னு நியூஸ் சேனல்ல நியூஸ் வரவும் ஷாக் ஆகிட்டேன்!”

  

“ப்ளான் செய்து முடிவெடுக்கலை. திடீர்னு தோணிச்சு. ப்ச்! அது முடிஞ்சு போன விஷயம்!”

  

“இருந்தாலும் நீங்க இன்னும் நிறைய செய்யலாம் சக்தி. அன்னைக்கு தனியா என்னை ஃபேஸ் செய்தப்போ எப்படி கான்ஃபிடன்ட்டா அடிச்சீங்க. அந்த மாதிரி தைரியம் ஒவ்வோர் பொண்ணுக்கும் வந்துட்டா, இந்த மாதிரியான குற்றம் எல்லாம் தானா குறைஞ்சுப் போயிடும். ஒரு அகாடமி மாதிரி ஸ்டார்ட் செய்து தற்காப்பு கலை சொல்லி கொடுங்க!”

  

“அதெல்லாம் நிறைய பேர் செய்றாங்க!”

  

“செய்றாங்க, ஆனால் பணம் சம்பாதிக்குற நோக்கத்துல செய்றாங்க. நீங்க நல்ல மனசோட

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.