”ஏற்கனவே வேலையை தொடங்கிட்டேன் ஜானு”
”அப்படியா என்ன வேலை”
”என்னை எப்படி உன் அப்பா அம்மா இங்க கொண்டு வந்து இறக்கினாங்களோ, அதே போல உன் மூர்த்தி மாமா குடும்பத்தையும் இங்க இறக்க வேண்டிய வேலையை வேங்கையன் கிட்ட கொடுத்திருக்கேன்”
”என்னது மூர்ததிமாமாவை இங்க வரவழைக்கப் போறியா எதுக்குடி”
”எல்லாம் காரணமாதான், மூர்த்திக்கும் வேங்கையனுக்கும் நடுவுல இருக்கற வித்தியாசத்தை வெளிக்கொண்டுவரனும், அப்பதான் எல்லாரும் ஜானகிக்கு மூர்த்தி ஏத்தவன்னு நம்புவாங்க”
”இதுவும் நல்ல யோசனைதான் ஆனா, இதுக்கு எப்படி வேங்கையன் சம்மதிச்சாரு”
”அவரு எங்க சம்மதிச்சாரு ஆஆ ஊஊன்னு கத்தினாரு, நான் சொல்லிட்டேன் உங்களுக்கு ஜானகி வேணும்னா இதை நீங்க செய்தாகனும், மூர்த்தியை விட நீங்கதான் உசந்தவர்ன்னு நிரூபிச்சிட்டா, ஜானகி உங்களை ஏத்துக்குவாள்ன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன், உடனே மூர்த்தியை பார்க்க கிளம்பி போயிட்டாருடி உன் மேல அவருக்கு அவ்ளோ காதல்”
”காதலாவது கத்திரிக்காயாவது வரட்டும் என் மூர்த்தி மாமா அவர் ரேஞ்சே வேற, அவருக்கு கால்தூசுகூட வரமாட்டாப்ல இந்த வேங்கையன், என்னவோ வேங்கையன்தான் உசந்தவன், அவன் கிடைச்சது நான் செஞ்ச பாக்கியம், அவன் இல்லைன்னா என்னால வாழமுடியாது அப்படி இப்படின்னு அளந்தாங்களே, மூர்த்தி மாமாவுக்கும் வேங்கையனுக்கும் இருக்கற வித்தியாசத்தை தெரிஞ்சிக்கிட்டாதான் பேசினவங்க வாய் மூடுவாங்க, அப்புறம் என்ன சொல்வாங்க, அய்யோ பாவம் ஜானகி, நாமதான் தப்பா புரிஞ்சிக்கிட்டு அவள் வாழ்க்கையை அழிச்சிட்டோம், அதனால நாமளே ஜானகியை மூர்த்தியோட சேர்த்து வைக்கலாம்னு முடிவு எடுப்பாங்க, எது எப்படியோ 6 மாசம் வரைக்கும் காத்திருக்காம சீக்கிரமாவே நான் என் மாமா கையை பிடிச்சா அதுவே போதும் எனக்கு”