”என்னது”
”சும்மா சொன்னேன் நீங்க காதலிச்சா போதுமா, அவள் உங்களை காதலிக்க வேணாமா”
”வேணும்தான் ஆனா அவள் மூர்த்தியைதானே காதலிக்கிறா”
”அதுக்கு பேரு வெறும் ஈர்ப்புதான், காதல் கிடையாது”
”அப்படியா”
”அப்படித்தான் கூடிய சீக்கிரம் ஜானு உங்களை காதலிப்பா“
”எப்படி”
”அதுக்குதானே நான் இங்க வந்திருக்கேன், ஜானு மூர்த்தியை விட்டுட்டு உங்களை தேடி வருவா அதுவும் காதலோட”
”அப்படி மட்டும் ஒண்ணு நடந்தா நீ என்ன கேட்டாலும் நான் தருவேன்” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்துவிட்டு
”நான் எதையும் எதிர்பார்த்து இங்க வரலை, என் தோழி சந்தோஷமா இருக்கனும், அதுக்காக வந்தேன் அப்படியே நான் கேட்டாலும் உங்களால நான் கேட்டதை தரமுடியாது”
”கண்டிப்பா தருவேன் அது எவ்ளோ பெரிய விசயமா இருந்தாலும் சரி போராடி உனக்கு தருவேன் என்னை நம்பு”
”எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு விடுங்க“
”அட நம்பலையா உன் மேல சத்தியம் செய்றேன், நீ என்ன கேட்டாலும் நான் தருவேன்” என