(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

🌼🌸❀✿🌷

   

நீ அஹல்யா மதியூர்ல இருக்குறதா சொன்னதால இன்னும் கொஞ்சம் கிளறினேன் சக்தி. நமக்கு வேண்டிய விஷயம் கிடைச்சது. கௌரவோட அம்மாக்கு மதியூர்ல பூர்வீக சொத்துன்னு நிறைய இடம் இருக்கு. சொன்னா நம்ப மாட்ட, அந்த சொத்து எல்லாத்தையும் கிஃப்ட்ன்னு அஹல்யா பேருக்கு மாத்தி எழுதி கொடுத்திருக்காங்க. மும்பைல அவங்களுக்காக லீகல் பேப்பர்ஸ் ப்ரிபேர் செய்த ஜூனியர் லாயர் கிட்ட பேசினேன். அஹல்யா ஹாஸ்பிட்டல்ல காணாமல் போன அதே நாள்ல இந்த வேலையும் நடந்திருக்கு. அஹல்யாக்கு இந்த சொத்து பேரு மாறின விபரம் தெரியுமான்னு தெரியலை. ஏன்னா பேப்பர்ஸ் ரெடி செய்த ஜூனியர் அதை ப்ராசஸ் செய்ய அபிராமி கொடுத்த தமிழ்நாட்டு அட்ரஸ்க்கு அனுப்பி இருக்காங்க. அது இன்னும் முழுசா முடிஞ்ச மாதிரி தெரியலை.” கையிலிருந்த பேப்பர்களை புரட்டினான் பிரணய்.

  

“அவ்வளவு தான் சக்தி. நடிக்கனும்னு ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக அஹல்யாவோட வாழ்க்கைப் பயணம் எப்படியோ மாறிப் போயிடுச்சு!”

  

“தேங்க்ஸ் பிரணய்!”

  

“அஃப் கோர்ஸ் சக்தி! இன்னொரு வேலை இருக்கு, ஸோ டாக் டு யூ லேட்டர். பை!”

  

“பை பிரணய்!”

  

ஃபோனை டேபிள் மேலே போட்டு விட்டு சத்யா பக்கம் திரும்பினாள் சக்தி. சத்யாவின் முகம் எப்படியோ இருந்தது.

  

“அஹல்யா ஏன் மும்பை பத்தி பேச விரும்பலைன்னு இப்போ புரியுது!” சத்யாவின் மனநிலையை ஓரளவிற்கு புரிந்துக் கொள்ள முடிந்ததால் சக்தியே பேச்சை ஆரம்பித்து வைத்தாள்!

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.