(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

தலை அசைத்து ஆமோதித்த சத்யா, “ஆனால் அபினவ்க்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு சக்தி. அஹல்யா அவன் கிட்ட எதையும் மறைக்கலைன்னு நினைக்கிறேன்,” என்றாள்.

  

“இருக்கலாம் சத்யா!”

  

“அபினவ் பக்கா ஜென்டில்மேன். அஹல்யா அபினவை கல்யாணம் செய்துக்கிட்டா சந்தோஷமா இருப்பாங்க. நாம கட்டாயம் அவங்களுக்கு ஹெல்ப் செய்யனும் சக்தி!”

  

“இப்போவே ஹெல்ப் செய்துட்டு தான் இருக்கோம்,” என்றாள் சக்தி அமைதியாக!

  

“இந்த மாதிரி இல்லை. இன்னும் அதிகமா! ஒருவேளை தேன் சந்தேகப் படுற மாதிரி அஹல்யா தான் சேகரன் இறந்ததுக்கு காரணமா இருந்தா கூட நாம அவங்களுக்கு ஹெல்ப் செய்யனும். பாவம் சக்தி அவங்க. அவ்வளவு காயத்தோட இங்கே வந்தா, இங்கே இந்த சேகரன் வேற இம்சை செய்திருக்கான்!”

  

“சட்டத்தை எல்லோரும் அவங்கவங்க கையில எடுக்க ஆரம்பிச்சா சரியா இருக்காது சத்யா. அது தப்பு!”

  

“போலீஸா பேசாத சக்தி. ஒரு பொண்ணா பேசு!” கோபமாக சொன்னாள் சத்யா.

  

“நீ உணர்ச்சிவசப்பட்டு பேசுற சத்யா. எமோஷனலா முடிவெடுக்குறது சரியா இருக்காது.  முதல்ல சேகரன் சாவுல அஹல்யாக்கு சம்மந்தம் இருக்கான்னு பார்ப்போம். அப்புறமா இதை எல்லாம் யோசிக்கலாம்.” இப்போதும் பதற்றம் இல்லது அமைதியாக சொன்னாள் சக்தி.

  

🌼🌸❀✿🌷

   

சக்தி மும்முரமாக வெள்ளை போர்டில் மார்க்கர் பயன்படுத்தி எழுதிக் கொண்டு இருந்தாள்.

  

சேகரனை குறிப்பிட S என்று போர்ட் நடுவே பெரிய எழுத்தில் எழுதி வைத்தாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.