”மாமா மாமா இங்க பாருங்க, உங்களுக்கு பிடிச்ச பலகாரங்களை செய்து கொண்டு வந்திருக்கேன் சாப்பிடுங்க மாமா” என சொல்ல மூர்த்தியோ இருந்த கோபத்தில் அவள் கொண்டு வந்த பலகார தட்டை தட்டிவிட்டு
”ரொம்ப முக்கியம் இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை”
”என்ன மாமா ஆச்சி உங்களுக்கு, இதெல்லாமே நீங்க ஆசையா சாப்பிடறதுதானே, எத்தனை முறை நான் உங்களுக்காக இதை கொண்டு வந்தப்பலாம் சாப்பிட்டீங்க, இப்ப என்னாச்சி மாமா”
”அப்ப நீ என் முறைபொண்ணா இருந்த சாப்பிட்டேன், இப்ப நீ இன்னொருத்தனோட மனைவி அந்த எல்லையில நீயிரு, நானும் தள்ளியே இருக்கேன், உன் புருஷன் இருக்கறப்ப எதுக்கு எனக்கு பலகாரத்தை கொண்டு வந்து கொடுக்கற, நான் கேட்டனா உன்கிட்ட” என எரிந்துவிழ அவளோ கண்கள் கலங்கினாள்
”மாமா ஏன் மாமா கோச்சிக்கிறீங்க, எதுக்காக இப்படி வெடுக்வெடுக்குன்னு பேசறீங்க முன்ன மாதிரி என்கிட்ட பாசமா பேசுங்க மாமா”
”பேசறதா உன்கிட்டயா சே”
”ஏன் என்கிட்ட பேசினா என்ன தப்பு”
”இன்னொருத்தன் மனைவிகூட நான் பாசமா பேசினா பார்க்கறவன் என்னை கேவலமா நினைப்பான்”
”நான்தான் இந்த கல்யாண வாழ்க்கையையே விட்டுட்டு வரேன்ங்கறேனே மாமா அப்புறம் என்ன“
”வந்த அன்னிக்கு உன் மேல பாசத்தை பொழியறேன் இப்ப இடத்தை காலி பண்ணு ஒரே புழுக்கமா இருக்கு தாங்க முடியலை, காத்து வரட்டும் போறியா முதல்ல” என விரட்ட