(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”ஆனா அருமையா பாடறாரே”

  

”பாட்டா நான்கூடதான் பாடுவேன் கேட்கறீங்களா”

  

”வேண்டாம் வேண்டாம் நான் இங்க வந்ததும் ஒரு உண்மையை தெரிஞ்சிக்கிட்டேன் உங்களுக்கும் ஜானகிக்கும் இடையில ஏதோ ஒண்ணு ஓடுதே”

  

”சே சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை அது பொய் அவள் என் முறைப்பொண்ணு அவ்ளோதான் அவளுக்கு வேங்கையனோட கல்யாணம் ஆயிடுச்சி”

  

”ஆனா அவள் உங்களைதானே விரும்பறா, 6 மாசம் கழிச்சி டைவர்ஸ் ஆனதும் உங்களை கல்யாணம் செய்துக்கப் போறதா சொன்னாளே”

  

”அய்யோ அவள் ஒரு பைத்தியக்காரி, கண்டபடி உளறுவா, அவளை போய் நான் கல்யாணம் செய்துக்கறதா அதுக்கு வாய்ப்பேயில்லை”

  

”பின்ன ஏன் அவள் அப்படி சொல்லனும்”

  

”அவள் ஒரு பைத்தியம், எதையாவது உளறுவா சொல்லப்போனா என்னைப் பத்தி உங்க வீட்ல தப்பு தப்பா சொன்னதே அவள்தான்”

  

“அப்படியா அவளா ஏன் அப்படி சொல்லனும்“

  

”எல்லாம் பொறாமைதான் காரணம் நான் சந்தோஷமா இருக்கறது அவளுக்குப் பிடிக்கலை”

  

”என்னவோங்க எனக்கு ஒண்ணுமே புரியலை” என சொல்ல அதற்குள் வீரசிங்கம் அவ்விடம் வந்தார். மூர்த்தியோ வீரசிங்கத்தைக் கண்டதும் சட்டென எழுந்து பயத்தில் தன் அறைக்குச் சென்றுவிட தனியாக இருந்த மஹதியிடம் பேசினார்

  

”நீ எந்த வழியா வந்தியோ அந்த வழியா வெளிய போயிடு, அதான் உனக்கு நல்லது” என

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.