எங்களை நீ மதிக்க மாட்டியா”
”அய்யோ அத்தை அப்படியில்லை அதான் எல்லாருக்கும் சேர்த்து அவங்க சமைக்கறாங்கள்ல, அதனால நான் தனியா உங்களுக்கு சமைக்கலை“ என சொல்ல மங்களமோ
”நானே எல்லாருக்கும் சேர்த்து சமைச்சிட்டேன்” என்றார் ஆனால் செல்வமோ
”நாங்க ஒண்ணும் உங்க வீட்டுக்கு விருந்து சாப்பிட வரலை, நாங்க என்ன சோத்துக்கு வக்கில்லாதவங்களா நாங்க இங்க வந்ததே வேற ஒரு விசயத்துக்காக” என சொல்ல உடனே மஹதியோ
”அப்படின்னா என்ன சொல்ல வர்றீங்க எங்கத்தை செய்ற சமையலை நீங்க சாப்பிட மாட்டீங்க அதானே“
”அதேதான்”
”அப்போ பட்டினி கிடக்கப் போறீங்களா”
”நாங்க ஏன் பட்டினி கிடக்கனும்”
”ஓ நீங்களே சமைச்சி சாப்பிடறீங்களா”
”நாங்களா அதுக்கு எதுக்கு ஜானகி இருக்காளாம், மூர்த்தி வேணும்னு நினைக்கறவ எங்களுக்கு சமையல் செய்ய மாட்டாளாமா”
”அவளுக்குதான் நீங்க தேவையில்லையே உங்க நினைப்பு அவளுக்கு இருந்திருந்தா உங்களுக்கும் சேர்த்து அவள் சமைச்சிருப்பா ஆனா இல்லையே பாருங்க, அவள் இந்த வீட்ல ஏன் அவளுக்கு கூட சமைக்கலை உங்க பையனுக்கு மட்டும் விதவிதமா சமைச்சி வைச்சிருக்கா” என சொல்ல செல்வமும் பரிமளாவும் ஜானகியை கோபமாக முறைக்க அதைக்கண்டு நடுங்கினாள் ஜானகி.