(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

இருக்காங்கம்மா, நாம கஷ்டப்பட வேணாம், வீட்டை பொறுப்பா பார்த்துக்கிட்டு சமையல் செய்தா போதும், சமையல் செய்றது உனக்கு கஷ்டமாயிருந்தா சொல்லு, அதையும் நானே செய்துடறேன், நம்ம 4 பேருக்குதானே சாதாரணமா செய்தா கூட போதும், 3 வேளைக்கும் விருந்து வைக்கனும்னு அவசியம் இல்லை”

  

”சரிங்கத்தை அப்போ எல்லாரையும் கூப்பிடவா நாம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்“

  

”தாராளமா நீ போய் எல்லாரையும் கூப்பிடு, அதுக்குள்ள நான் சமைச்சதை கொண்டு வந்து சாப்பிடற இடத்தில வைக்கிறேன்”

  

”அத்தை அதையாவது நான் செய்றேனே”

  

”இத்தனை நாளும் நான்தான் அதை செய்தேன் அது ஒண்ணும் கஷ்டம் இல்லை வேணும்னா நீ நாளையில இருந்து இந்த வேலையை செய்யலாமே”

  

”ஓ தாராளமா செய்றேனே அத்தை எனக்கு இது பிடிச்சிருக்கு” என சொல்லியவள் ஜானகியைப் பார்த்தாள் அவளோ பதட்டமாக இருக்க, இளப்பமாக சிரித்தவள் அவளிடம் சென்று அவளின் தோளை தட்ட அவளோ மஹதியை பேய் போல பார்த்து வைத்தாள்

  

”பயப்படாதீங்க அக்கா, இது நான்தான், உங்களை நினைச்சா பாவமா இருக்கு, செஞ்ச வைச்ச சாப்பாடு எல்லாம் வீணாயிடுச்சே இனி என்ன செய்வீங்க, சரி விடுங்க போங்க நேரத்தோட சப்பாத்தி செய்ங்க, மறக்காம கறி குழம்பும் செய்ங்க, எங்க குடும்ப சமையல் முடிஞ்சிடுச்சி அதனால நாங்க போய் சாப்பிடறோம், நீங்க பொறுமையா சமைச்சி முடிச்சி உங்க மூர்த்தி மாமாவுக்கும் அவரோட குடும்பத்துக்கும் சாப்பாடு பரிமாறி அதுக்கு அப்புறம் நீங்க சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள 12 ஆயிடும்னு நினைக்கிறேன், சரிக்கா நான் போறேன் எனக்கு பசிக்குது” என சொல்லிவிட்டு அவள் வெளியே செல்ல மங்களமும் சமைத்த உணவுகளை சாப்பிடும் இடத்தில் வைக்கலானார்.

  

அந்நேரம் மூர்த்தியின் குரல் கேட்டது

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.